இந்த புகைப்படத்தில் உள்ள இந்திய அணியின் அதிரடி வீரர் யார் தெரியுமா .? புகைப்படம் உள்ளே

king-3
- Advertisement -

இந்த புகைப்படத்தில் இருப்பவர் வேறுயாருமில்லை, இந்திய அணியின் கேப்டன் கிங் கோலி. அவர் தனது அப்பாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தந்தையர் தினத்தன்று ட்விட்டரில் பதிவு செய்து இருக்கிறார். இவர் நவம்பர் 5ஆம் தேதி 1988ஆம் ஆண்டு இந்திய தலைநகர் டெல்லியில் பிறந்தார். சிறு வயது முதலே கிரிக்கெட்டின் மீது அதிக ஆர்வம் காட்டிய இவர் தனது சிறப்பான ஆட்டத்தால் இந்திய Under 19 அணியில் இடம்பிடித்து இன்று கிரிக்கெட் உலகின் மன்னனாக திகழ்கிறார்.

king

இன்றுடன் ஆகஸ்ட் 18(2018) கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையின் 10ஆம் ஆண்டை தொட்டு இருக்கிறார். கடந்த 2008 வருடம் ஆகஸ்ட் 18ஆம் தேதி தனது முதல் சர்வேதேச ஒரு நாள் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக விளையாடினர். அதிலிருந்து இன்று வரை 211 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 9779 ரன்களை குவித்துள்ளார். மேலும், இவரது ஆவரேஜ் 58.21 என்று மிரள வைக்கிறார்.

- Advertisement -

ஒருநாள் போட்டியில் மட்டுமில்லாது டெஸ்ட் மற்றும் டி 20 போட்டிகளில் கூட இவரது சாதனை அதிகம்.இவர் இதுவரை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் இரண்டையும் சேர்த்து 57 சதங்களை அடித்து நொறுக்கியுள்ளார். மேலும் சச்சினின் பல சாதனைகளை விராட் கோலி தகர்க்க உள்ளார் என்றல் அது மிகை ஆகாது. கிரிக்கெட்டின் 22 யார்டுக்குள் ஒரு ஆட்சியே புரிந்து வருகிறான் கிங் கோலி.

king 1

இன்று இந்திய அணியின் கேப்டனாக மூன்று வடிவிலும் வடிவிலும் செயல்படும் கோலி, இந்திய அணி கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென ஒரு பெரிய இடத்தையே கைப்பற்றியுள்ளார். மேலும் பல ஆண்டுகள் விளையாட இருக்கும் கோலி, பல சாதனைகளை படைக்க வாழ்த்துக்கள்.

Advertisement