IND vs RSA : ஈஸியா ஜெயிச்சிட்டோம். ஆனா அவரு எங்களுக்கு பயத்தை காட்டிட்டாரு – தெ.ஆ கேப்டன் பவுமா பேசியது என்ன?

Bavuma
- Advertisement -

தெம்பா பவுமா தலைமையிலான தென் ஆபிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்திய அணியில் தொடர்ச்சியாக விளையாடி வரும் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் ரிஷப் பண்ட் தலைமையிலான இளம் இந்திய அணியை எதிர்த்து விளையாடி வரும் அனுபவ வீரர்கள் கொண்ட தென் ஆப்பிரிக்க அணி முதல் போட்டியில் இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தியிருந்தது.

miller

- Advertisement -

அதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் தங்களது ஆதிக்கத்தை தொடர்ந்த தென்னாப்பிரிக்க அணியானது முதலில் விளையாடிய இந்திய அணியை 148 ரன்களுக்குள் சுருட்டியது. அதனை தொடர்ந்து 149 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணியானது கிளாஸனின் அதிரடி ஆட்டம் காரணமாக 18.2 ஓவரிலேயே 6 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் குவித்தது 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் தற்போது தென் ஆபிரிக்க அணியானது 2 க்கு 0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இன்னும் இந்த தொடரில் எஞ்சியுள்ள மூன்று போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட தென்னாப்பிரிக்க அணி இந்த தொடரை கைப்பற்றிவிடும். இந்நிலையில் நேற்று கட்டாக் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பெற்ற வெற்றி குறித்து பேசிய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா கூறுகையில் : இந்த சேஸிங் ஒரு சவாலான சேஸிங்காக அமைந்தது.

Bhuvaneswara Kumar

ஏனெனில் இந்திய வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் பவர்பிளே ஓவர்களிலேயே மிகச்சிறப்பாக பந்துகளை வீசினார். அவரது பந்து வீச்சு போட்டியின் ஆரம்பத்திலேயே பேசியது. இருப்பினும் இறுதியில் நாங்கள் மிகச் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுவிட்டோம். இந்த போட்டியில் யாராவது ஒருவர் இறுதிவரை போட்டியை கொண்ட கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தோம். அந்த வகையில் நான் அந்த ரோலை எடுத்து விளையாடினேன். இருப்பினும் இடையில் ஆட்டமிழந்தது வருத்தத்தை அளிக்கிறது. இந்த போட்டியில் செய்த தவறை பாடமாக எடுத்துக்கொண்டு இனிவரும் போட்டிகளில் அந்த தவறை திருத்திக் கொள்ள முயற்சிப்பேன்.

- Advertisement -

இந்த சேஸிங் மிகவும் எளிதாக இருக்காது என்பது எங்களுக்கு தெரியும். ஆனாலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. இந்த போட்டியிலும் எங்களது திட்டங்களை சரியாக செயல்படுத்தி வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோன்று மில்லர் எங்களது அணிக்காக 5 மற்றும் 6-வது இடத்தில் இறங்கி அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். இந்த போட்டியில் டீ காக்கிற்கு பதிலாக அணியில் இணைந்த கிளாஸன் மிகச் சிறப்பாக விளையாடி எங்களுக்கு வெற்றியை தேடித் தந்துள்ளார்.

இதையும் படிங்க : IND vs RSA : 2 ஆவது போட்டியிலும் எங்களால் இந்த விஷயத்தை பண்ண முடியல – தோல்வி குறித்து பண்ட் வருத்தம்

அவரால் பேட்டிங்கால் போட்டியின் சூழ்நிலையை எப்பொழுது வேண்டுமானாலும் மாற்ற முடியும் அந்த அளவிற்கு அவர் மிகச் சிறப்பான ஒரு வீரராக இருந்து வருகிறார். அவரது இணைப்பு எங்கள் அணியின் பேட்டிங் ஆர்டரில் கூடுதல் வலு சேர்த்தது. எந்த ஒரு பணியாக இருந்தாலும் சரி அதனை சரியாக செய்தால் வெற்றி கிடைக்கும் என்பது இந்த போட்டியில் மூலம் தெரியவந்துள்ளது என தெம்பா பவுமா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement