IND vs RSA : முதல் 2 போட்டிகளில் வெற்றியை பெற்ற நாங்கள் இந்த போட்டியில் தோக்க இதுவே காரணம் – பவுமா பேட்டி

Bavuma
- Advertisement -

தெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் அபாரமாக செயல்பட்டு இந்திய அணியை வீழ்த்தியிருந்த தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3-வது டி20 போட்டி நேற்று விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது.

IND vs RSA Chahal Axar Patel

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா கடந்த இரண்டு போட்டிகளை போன்றே இந்த போட்டியிலும் சேசிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை குவித்தது.

பின்னர் 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணியானது இம்முறை இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 131 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 48 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய தோல்வியை சந்தித்து இருந்தது. இந்நிலையில் இந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து பேசிய தென்னாபிரிக்க அணியின் கேப்டன் பவுமா கூறுகையில் :

IND vs RSA Harshal Patel

இந்த போட்டியில் நாங்கள் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்திய அணி இம்முறை சிறப்பான அணியாக திகழ்ந்தார்கள். பந்துவீச்சின் போது எங்களுக்கு எதிராக அவர்கள் தொடர்ச்சியாக அழுத்தத்தை கொடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றியதால் எங்களால் எந்த ஒரு இடத்திலும் முன்னிலை பெற முடியவில்லை.

- Advertisement -

மேலும் இன்றைய போட்டியில் எங்களது பீல்டிங் சற்று மோசமாக அமைந்தது. அதேபோன்று பேட்டிங்கிலும் சரியான பார்ட்னர்ஷிப் எங்கும் கிடைக்கவில்லை. இதன் காரணமாகவே இந்த போட்டியில் எந்த ஒரு கட்டத்திலும் இந்திய அணியை எங்களால் முந்த முடியவில்லை. முதல் இரண்டு போட்டிகளிலும் நாங்கள் மிகச் சிறப்பாக விளையாடினோம். ஆனால் இம்முறை எங்களால் அதை தொடர முடியவில்லை. இன்னும் சில விஷயங்களில் குறை இருக்கிறது.

இதையும் படிங்க : IND vs RSA : 3 ஆவது போட்டியில் இப்படி நாங்க அசத்தலாக ஜெயிக்க இவங்க தான் காரணம் – ரிஷப் பண்ட் மகிழ்ச்சி

அதனை சரிசெய்து கொண்டு இத்தொடரை கைப்பற்ற முயற்சிப்போம். இந்த போட்டியில் சேஸிங்கின் போது துவக்கத்திலேயே அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்ததால் அந்த அழுத்தத்தில் இருந்து நாங்கள் இறுதிவரை மீளமுடியாமல் சென்றுவிட்டது என தோல்வி குறித்து பவுமா வருத்தமாக பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement