இந்தியாவை பற்றி தெ.ஆ கோச் சொன்னது சரியில்லை.. கடைசில அவரே வருத்தப்பட்டாரு.. பவுமா பேட்டி

Temba Bavuma
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடிய டெஸ்ட் தொடரில் 2 – 0 (2) என்ற கணக்கில் 25 வருடங்கள் கழித்து தோற்றது. அதற்கு அடுத்து நடைபெற்ற ஒருநாள், டி20 தொடர்களை வென்ற இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு இரட்டை பதிலடி கொடுத்தது. முன்னதாக அந்தச் சுற்றுப்பயணத்தில் தென்னாப்பிரிக்கா பயிற்சியாளர் சொன்ன ஒரு கருத்து சர்ச்சையானது.

அதாவது கௌகாத்தியில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் 4வது நாளில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெறுவதற்கு தேவையான முன்னிலையைப் பெற்றும் டிக்ளர் செய்யத் தாமதப்படுத்தியது. அதற்கான காரணத்தைக் கேட்ட போது இந்தியாவை க்ரோவல் செய்ய விரும்பியதாலேயே தாமதமாக டிக்ளர் செய்ததாக தென்னாப்பிரிக்கா பயிற்சியாளர் சுக்ரி கோன்ராட் தெரிவித்தது சர்ச்சையானது.

- Advertisement -

முறையற்ற வார்த்தை:

ஏனெனில் க்ரோவல் என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் இழிவான பொருட்கள் இருக்கிறது. குறிப்பாக 1979 டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸை தோற்கடித்து அடிமையாக்குவோம் (க்ரோவெல்) என்று இங்கிலாந்து கேப்டன் டோனி கிரைக் இனவெறியைத் தூண்டும் வகையில் பேசினார். அதற்கு ரத்தம் கொதிப்பதாக சொன்ன க்ளைவ் லாய்ட் தலைமையிலான 3 – 0 (3) என்ற கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்து தக்க பதிலடி கொடுத்தது.

அதே போன்ற தொனியில் இந்தியாவை வெற்றியை நெருங்க விடாமல் க்ரோவெல் செய்வதற்காகவே தாமதமாக டிக்ளர் செய்ததாக சுக்ரி புன்னகையுடன் சொன்னது சர்ச்சையானது. அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து தம்முடைய கருத்தை அனைவரும் தவறாக எடுத்துக் கொண்டதாக சுக்ரி வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில் இந்தியாவைப் பற்றி தங்களது பயிற்சியாளர் அப்படி சொன்னது முறையற்றது என்பதை தென்னாப்பிரிக்க கேப்டன் தெம்பா பவுமா ஒப்புக்கொண்டுள்ளார்.

- Advertisement -

பவுமா கருத்து:

அதற்காக தங்களது பயிற்சியாளர் சுற்றுப்பயணத்தின் முடிவில் வருத்தம் தெரிவித்தது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “க்ரோவெல் கருத்தைச் சொன்னதற்காக சுக்ரி சில வெப்பத்தை வாங்கிக் கொண்டார். அவருடைய கருத்தை தெளிவுபடுத்துமாறு செய்தியாளர்கள் சந்திப்பில் என்னையும் அழுத்தத்திற்குள் தள்ளினார்கள். அப்போது அதற்கான விளக்கத்தை கொடுக்க சுக்ரி தான் சரியானவர் என்று நான் கருதினேன்”

இதையும் படிங்க: 47.3 ஓவரில் 413 ரன்ஸ்.. தெ.ஆ போல 2வது உலக சாதனை படைத்த கர்நாடகா.. ஜார்கண்டுக்கு மாஸ் பதிலடி

“முதல் முறையாக அதைப் பற்றிய பின்னணியைக் கேட்ட போது அதனுடைய விரும்பத்தகாத ருசி எனக்கும் தெரிந்தது. அதே சமயம் அது அந்த டெஸ்ட் தொடர் எங்கள் அணியில் இருக்கும் ஒருவருக்கு எவ்வளவு போட்டி மிகுந்தது என்பதையும் எனக்கு உணர்த்தியது. இருப்பினும் ஒருநாள் தொடரின் இறுதியில் அதைப் பற்றிய விளக்கம் கொடுத்த சுக்ரி அந்த சர்ச்சையை படுக்கையில் போட்டார். பின்னோக்கிச் செல்களில் அவர் இன்னும் நல்ல வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தால் அதை நான் ஒப்புக்கொண்டிருப்பேன்” என்று கூறினார்.

Advertisement