அன்று பும்ரா சொன்ன வார்த்தைக்கு தான்.. எங்க கோச் இந்தியாவை இழிவாக பேசிருப்பாரு.. பவுமா பதிலடி

Temba Bavuma
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 2 – 0 (2) என்ற கணக்கில் இந்தியா தோல்வியை சந்தித்தது. முன்னதாக அத்தொடரில் 2வது போட்டியின் 4வது நாளில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெறுவதற்கு தேவையான முன்னிலையைப் பெற்றும் டிக்ளேர் செய்வதற்கு தாமதப்படுத்தியது. அதற்கான காரணத்தைக் கேட்ட போது நாங்கள் இந்தியாவை “க்ரோவெல்” செய்ய விரும்பியதாலயே தாமதமாக டிக்ளேர் செய்ததாக தென்னாப்பிரிக்கா பயிற்சியாளர் சுக்ரி கோன்ராட் தெரிவித்தது சர்ச்சையை உண்டாக்கியது.

அதாவது க்ரோவெல் என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் நிறைய இழிவான அர்த்தங்கள் உள்ளன. குறிப்பாக 1976ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியை தோற்கடித்து க்ரோவெல் அதாவது அடிமையாக்குவோம் என்று இங்கிலாந்து கேப்டன் டோனி கிரைக் இனவெறியை தூண்டும் வகையில் பேசினார். அதற்கு எங்களின் ரத்தத்தை கொதிக்க வைக்கிறது என்று வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் க்ளைவ் லாய்ட் பதிலடி கொடுத்தார்.

- Advertisement -

சர்ச்சையான கருத்து:

அவரது தலைமையில் வெறித்தனமாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 3 – 0 (3) என்ற கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்து டோனி க்ரைக்கிற்கு தக்க பதிலடி கொடுத்தது. தற்போது அதே போன்ற அர்த்தத்தில் கௌகாத்தி போட்டியில் இந்தியாவை வெற்றியை நெருங்க விடாமல் செய்து விட்டு கடைசி நாளில் முடிந்தால் தாக்குப் பிடித்துக்கொள்ளுமாறு சவால் விட விரும்பியதாலேயே தாமதமாக டிக்ளர் செய்ததாக சுக்ரி கோன்ராட் தெரிவித்தார்.

அதே சமயம் இனவெறி போன்ற எந்த சர்ச்சையான பொருளை வைத்து தாம் க்ரோவெல் வார்த்தையை பயன்படுத்தவில்லை என்றும் அவர் தெளிவுப்படுத்தினார். ஆனால் அப்படி வஞ்சப்புகழ்ச்சி முறையில் பேசிய அவருக்கு அனில் கும்ப்ளே போன்ற முன்னாள் வீரர்கள் கண்டனம் தெரிவித்தனர். சொல்லப்போனால் அப்படிப்பட்ட வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என்று தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் டேல் ஸ்டைன் கூட சுக்ரியை விமர்சித்திருந்தார்.

- Advertisement -

பவுமா பதிலடி:

இந்நிலையில் கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் ஜஸ்ப்ரித் பும்ரா, ரிஷப் பண்ட் ஆகியோர் தென் ஆப்பிரிக்கா கேப்டன் தெம்பா பவுமாவை “பௌனா” என்று பேசியது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. இந்தியில் “குட்டையன்” என்ற அர்த்தத்தைக் கொண்ட அவ்வார்த்தையை வைத்து அவர்கள் பவுமாவை பற்றி தங்களுக்குள் பேசிக்கொண்டது சர்ச்சையையும் உண்டாக்கியது.

இந்நிலையில் அதற்கு பதிலாடியாகவே தங்களுடைய பயிற்சியாளர் க்ரோவெல் எனும் வார்த்தையை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தியிருக்கலாம் என்று பவுமா தெரிவித்துள்ளார். இது பற்றி பவுமா. “எங்கள் பயிற்சியாளர் சொன்ன கருத்து இன்று காலை தான் எனக்குத் தெரிந்தது. அப்போது நான் போட்டியில் கவனம் செலுத்தியதால் அவரிடம் பேசும் வாய்ப்பை பெறவில்லை”

இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு கிழே விழுந்த இந்திய அணி.. 93 வருட வரலாறு காணாத மோசமான சாதனை

“சுக்ரி 60 வயதுக்கு நெருக்கமானவர் என்பதால் அவர் தன்னுடையக் கருத்தையும் பார்ப்பார். அதே சமயம் இத்தொடரில் சில வீரர்கள் (பண்ட், பும்ரா) கோட்டைத் தாண்டியுள்ளார்கள். அதற்காக எங்கள் பயிற்சியாளர் கோட்டைத் தாண்டினார் என்று சொல்லவில்லை. ஆனால் அவர் தனது கருத்தைப் பற்றி சிந்திப்பார்” என்று கூறினார்.

Advertisement