மேற்கு இந்திய தொடருக்கான அணி 18 ஆம் தேதி அறிவிக்கப்படும். 4 முக்கிய வீரர்களுக்கு ஓய்வு

india
- Advertisement -

இந்திய அணி தற்போது உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் தோல்வியடைந்து தொடரை இழந்து வெளியேறியுள்ளது. இந்நிலையில் அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி கலந்து கொண்டு விளையாட உள்ளது.

Kohli

- Advertisement -

இந்த தொடரில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் ஆகியவற்றில் விளையாட உள்ளது. ஆகஸ்ட் 3ம் தேதி துவங்கும் இந்த தொடர் செப்டம்பர் மூன்றாம் தேதி நிறைவடைகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி 17 மற்றும் 18 ஆம் தேதி கூட்டத்திற்கு பிறகு அறிவிக்கப்படும் என்று இந்திய அணி நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் நான்கு முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளது.

india

அவர்கள் யாரெனில் கேப்டன் கோலி, முகமது ஷமி, பும்ரா மற்றும் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களின் ஓய்வு ஒருநாள் தொடரில் மட்டுமே பின்னர் இவர்கள் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இணைவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் தோனி இடம் குறித்து தெளிவான தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement