இந்திய அணியை கூண்டோடு கொல்கத்தா, லக்னோவாக மாற்றும் கம்பீர்.. பயிற்சியாளர் குழுவில் சாதகமாக 3 பேர்

Gautam Gambhir 6
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் பயிற்சியாளர் பதவியிலிருந்து ஜாம்பவான் ராகுல் டிராவிட் விடைபெற்றார். அவரைத் தொடர்ந்து 2007, 2011 உலகக் கோப்பைகளை வெல்ல உதவிய அனுபவம் கொண்ட கௌதம் கம்பீர் புதிய பயிற்சியாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் புதிய பயிற்சியாளராக வந்ததும் கௌதம் கம்பீர் தம்முடைய அதிரடியான வேலைகளை துவங்கியுள்ளார்.

முதலாவதாக ரஞ்சிக் கோப்பையில் விளையாடாததால் ஸ்ரேயாஸ் ஐயரை பிசிசிஐ மத்திய சம்பள ஒப்பந்தத்திலிருந்து அதிரடியாக நீக்கியது. ஆனால் 2024 ஐபிஎல் கோப்பையை கொல்கத்தாவின் கேப்டனாக வென்ற அவரை அடுத்து நடைபெறும் இலங்கை ஒருநாள் தொடருக்கு தேர்ந்தெடுத்துள்ள கம்பீர் மீண்டும் இந்திய அணிக்குள் கொண்டு வந்துள்ளார். அதே போல ரோகித் சர்மாவுக்கு பின் ஹர்திக் பாண்டியா புதிய டி20 கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

- Advertisement -

கம்பீரின் அதிகாரம்:
ஆனால் அவரிடம் இருந்த துணை கேப்டன்ஷிப் பதவியை கூட பறித்த கௌதம் கம்பீர் புதிய கேப்டனாக சூரியகுமார் யாதவை நியமனம் செய்துள்ளார். அத்துடன் ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா போன்ற வீரர்களையும் கழற்றி விட்டுள்ள அவர் சுப்மன் கில்லை துணை கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளது பல ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.

முன்னதாக தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட கௌதம் கம்பீருக்கு தமக்கு தகுந்த துணை பயிற்சியாளரை தேர்ந்தெடுத்துக் கொள்ள பிசிசிஐ அதிகாரம் வழங்கியிருந்தது. அதைப் பயன்படுத்தும் கெளதம் கம்பீர் தற்போது இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவை கூண்டோடு கொல்கத்தா, லக்னோ அணிகள் போல மாற்ற உள்ளார். ஆம் இந்திய அணியின் அடுத்த பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் வீரர் அபிஷேக் ஷர்மா நியமிக்கப்பட உள்ளதாக கிரிக்பஸ் இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

- Advertisement -

அபிஷேக் ஏற்கனவே கடந்த பல வருடங்களாக கொல்கத்தா அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். அதே போல நெதர்லாந்து முன்னாள் வீரர் ரியான் டென் டஸ்சேட் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த துணைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளதாக கிரிக்பஸ் தெரிவிக்கிறது. இவரும் கொல்கத்தா அணிக்காக விளையாடி பின்னர் கம்பீருடன் இணைந்து பயிற்சியாளராக செயல்பட்டு வந்தவர்.

இதையும் படிங்க: இதெல்லாம் நியாயமா? கில் கிடையாது.. ருதுராஜ், சாம்சன் கழற்றி விடப்பட்ட அவர் தான் காரணம்.. ஆகாஷ் சோப்ரா

மேலும் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கெல் இந்திய அணியின் அடுத்த பவுலிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இவர் 2022 – 2023 வரை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் கம்பீருடன் சேர்ந்து பவுலிங் பயிற்சியாளராக வேலை செய்தவர். அந்த வகையில் தமக்கு சாதகமான 3 பேரை கௌதம் கம்பீர் பயிற்சியாளர் குழுவுக்குள் கொண்டு வந்துள்ளார். இருப்பினும் பழைய ஃபீல்டிங் பயிற்சியாளர் டி திலிப் மட்டும் தொடர்ந்து அதே வேலையில் செயல்பட உள்ளார்.

Advertisement