தப்பை ஒத்துக்கிறோம்.. இன்னும் 6 மாசத்துல அவரை மாதிரி சீனியர்களிடம் கேட்டு சுழலில் முன்னேறுவோம்.. ராகுல்

KL Rahul 2
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 25 வருடங்கள் கழித்து இந்தியா தங்களது சொந்த மண்ணில் தோல்வியைச் சந்தித்தது. ஏற்கனவே கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராகவும் இந்தியா ஒயிட்வாஸ் தோல்வியைச் சந்தித்திருந்தது. அதனால் சொந்த மண்ணில் எப்படி விளையாட வேண்டும் என்பதையே இந்திய அணியினர் மறந்து விட்டார்களா? என்று ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

அந்த தோல்விகளுக்கு சுழலுக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருந்த பிட்ச்கள் ஒரு காரணமாக அமைந்தது. அதை விட எதிரணி ஸ்பின்னர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் சரியாக எதிர்கொள்ளாததும் தோல்விக்கு முக்கிய காரணமானது. ஒரு காலத்தில் சச்சின், டிராவிட், லக்ஷ்மன் ஆகியோரால் உலகிலேயே ஸ்பின்னர்களை எதிர்கொள்வதில் இந்திய பேட்ஸ்மேன்கள் கில்லாடிகளாக கருதப்பட்டனர்.

- Advertisement -

தப்பை ஒத்துக்கிறோம்:

ஆனால் தற்போது சொந்த மண்ணில் கூட வெற்றி பெற முடியாத அளவுக்கு இந்திய பேட்ஸ்மேன்கள் திண்டாடுவது ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் சமீபத்திய தொடர்களில் இந்திய பேட்ஸ்மேன்கள் சுழல் பந்துகளை நன்றாக எதிர்கொள்ளவில்லை என்பதை ஒப்புக் கொள்வதாக கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். விரைவில் அது பற்றி சுனில் கவாஸ்கர் போன்ற முன்னாள் ஜாம்பவான் வீரர்களிடம் பேசி அடுத்த 6 மாதத்திற்குள் முன்னேறுவோம் என்று அவர் உறுதியளித்துள்ளார்.

இது பற்றி ஒருநாள் தொடருக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் பேசியது பின்வருமாறு. “என்னால் உறுதியான பதிலைக் கொடுக்க முடியாது. ஆம் நாங்கள் கடந்த சில தொடர்களில் சுழல் பந்துகளை நன்றாக விளையாடவில்லை. நாங்கள் சுழல் பந்துகளை நன்றாக எதிர்கொள்ளவில்லை என்பதை அங்கீகரிப்பது எங்களுடைய வேலையின் ஒரு அங்கமாகும். சுனில் கவாஸ்கர் சார் அதைப்பற்றி பேசியதை நீங்கள் பார்த்தீர்கள்”

- Advertisement -

இதையும் படிங்க:

“சுழலுக்கு எதிராக எப்படி இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதை அவரிடம் நாங்கள் பேசி புரிந்து கொள்வோம். ஏற்கனவே சுழலுக்கு எதிராக நாங்கள் முன்னேறும் வழிகளைக் கண்டறிய முயற்சிக்கிறோம். ஆனால் அது ஒரு இரவில் நடந்து விடாது. கடந்த காலத்து இந்திய பேட்ஸ்மேன்கள் சுழலை ஏன் நன்றாக எதிர்கொண்டனர் என்பதற்கான பதில் என்னிடம் இல்லை. அதற்கு பல காரணங்கள் இருந்திருக்கலாம். ஆனால் நாங்கள் சுழல் எதிர்கொள்வதில் முன்னேறும் வழிகளைக் கண்டறிவோம்”

இதையும் படிங்க: எல்லாருமே தல ரசிகர்கள் தான்.. ராஞ்சி போட்டியைக் காண தோனி வருகிறாரா? கேப்டன் ராகுல் பதில்

“இன்னும் 6 மாதங்களில் எங்களுக்கு இலங்கையில் டெஸ்ட் தொடர் உள்ளது. அதன் பின் ஆஸ்திரேலியா எங்கள் நாட்டுக்கு வருகிறார்கள். அதற்குள் நாங்கள் சுழல் பந்துகளை நன்றாக எதிர்கொள்வதற்கு தேவையான டெக்னிக்கல் விஷயங்களை கண்டறிவோம். அதற்காக நாங்கள் எங்களுடைய சீனியர் வீரர்களை அணுகி அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வோம்” என்று கூறினார்.

Advertisement