- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இனியும் அவர நம்பி பிரயோஜனம் இல்ல, 2023 உ.கோ வெல்ல வேற நல்ல இளம் வீரர்களை பாருங்க- ஆகாஷ் சோப்ரா அதிரடி

2023 காலண்டர் வருடத்தில் ஜூன் மாதம் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலகக் கோப்பையை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி விளையாடுகிறது. ஆனால் அத்தொடர்களை வெல்வதற்கு அவசியமாக கருதப்படும் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் அவதிப்பட்டு வருவது இந்திய அணிக்கு பின்னடைவாகவே இருந்து வருகிறது. கடந்த 2016இல் அறிமுகமாகி 2018 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் தன்னுடைய வித்தியாசமான பந்து வீச்சு ஆக்சனால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து வெற்றியை எந்த நேரமும் இந்தியாவின் பக்கம் திருப்பக்கூடிய கருப்பு குதிரையாக உருவெடுத்துள்ள அவருக்கு உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்பதற்காகவே பணிச்சுமை நிர்வகிப்பதற்காக முக்கியமற்ற தொடர்களில் ஓய்வு கொடுக்கப்பட்டது.

ஆனால் அதையும் தாண்டி கடந்த ஜூலை மாதம் நடந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் காயமடைந்த அவர் துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் பங்கேற்காதது தோல்வியை கொடுத்தது. இருப்பினும் அதிலிருந்து குணமடைந்து ஓரிரு போட்டிகளில் விளையாடிய அவர் மீண்டும் காயமடைந்து கடைசி நேரத்தில் வெளியேறியதால் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையிலும் இந்தியாவுக்கு தோல்வியே பரிசாக கிடைத்தது. அதற்கிடையே முழுமையாக குணமடைய 6 மாதம் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் விரைவாக குணமடைந்து வந்ததால் நடைபெற்று வரும் இலங்கை தொடருக்கான இந்திய அணியில் அதிரடியாக சேர்க்கப்பட்டார்.

- Advertisement -

மறக்க வேண்டிதான்:
ஆனால் அவசரமாக களமிறங்கி மீண்டும் காயமடையக் கூடாது என்பதுடன் முழுமையாக பந்து வீச இன்னும் காலம் தேவைப்படுவதால் இலங்கை ஒருநாள் தொடரில் பும்ரா வெளியேறியதாக பிசிசிஐ அறிவித்தது மீண்டும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. அது போக அடுத்து நடைபெறும் நியூஸிலாந்து சுற்றுப்பயணத்திலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு கட்டாயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் பிப்ரவரி நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் கோப்பையிலும் அவர் பங்கேற்பது சந்தேகமென்று புதிய செய்திகள் வெளியாகியுள்ளன.

அதனால் கடுப்பாகும் ரசிகர்கள் ஐபிஎல் மட்டும் விளையாட தகுந்த அவர் மீண்டும் 2023 ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடு வந்தால் போதும் என்று கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள். ஏனெனில் 2019 – 2022 வரை இந்தியா விளையாடிய டி20 கிரிக்கெட் போட்டிகளில் 30% மட்டுமே விளையாடி அவர் அதே காலகட்டத்தில் மும்பைக்காக 95% போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்நிலையில் இந்த வருடம் உலகக் கோப்பை நடைபெறுவதால் அவ்வளவு சீக்கிரம் அவசரப்பட்டு பும்ரா விளையாட மாட்டார் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

- Advertisement -

எனவே பும்ராவை மறந்து விட்டு தற்போது நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் முகமது சிராஜ், உம்ரான் மாலிக் போன்ற இளம் வீரர்களை மேற்கொண்டு உலகக் கோப்பையை முன்னிட்டு இந்திய அணி நிர்வாகம் வளர்க்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “அவர் கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து களமிறங்கி விளையாடாமல் இருப்பது எனக்கு கவலையை கொடுத்துள்ளது. என்னை கேட்டால் பும்ராவை மறந்து வாழ்ந்து விளையாட வேண்டிய காலத்துக்கு தயாராக வேண்டிய நிலைமைக்கு நாம் வந்து விட்டதாக நினைக்கிறேன்”

“ஏற்கனவே காயத்திலிருந்து குணமடைந்து வந்த அவர் ஓரிரு போட்டியில் விளையாடிய பின் மீண்டும் காயமடைந்து சென்று விட்டார். தற்போது இந்திய அணிக்குள் வந்துள்ள அவர் களமிறங்கி விளையாடவில்லை. சொல்லப்போனால் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்ட அவர் மீண்டும் வெளியேறியுள்ளார். ஆனால் அவருடைய இந்த தொடர் கதை உலகக் கோப்பையை முன்னிட்டு இந்தியாவுக்கு நல்ல நிலையை ஏற்படுத்தவில்லை. அவர் ஏற்கனவே கடந்த உலகக் கோப்பையிலும் பங்கேற்கவில்லை”

இதையும் படிங்க: வீடியோ : இதுக்கு முடிவே இல்லையா? அம்பயரை களத்திற்குள் சென்று மிரட்டிய சாகிப் அல் ஹசன் – தடை கோரும் ரசிகர்கள்

“எனவே பும்ரா போலவே யாரும் இருக்க முடியாது என்றாலும் தற்சமயத்தில் நம்மிடம் முகமது சிராஜ் வளர்ந்து வரும் பவுலராக அசத்தி வருகிறார். அதேபோல் உம்ரான் மாலிக், முகமது சமி ஆகியோரும் ஒருநாள் கிரிக்கெட்டில் அசத்துகின்றனர். அர்ஷிதீப் தயாராக இருக்கிறார். பிரசித் கிருஷ்ணா காயத்தைப் பற்றி தெரியாது என்றாலும் அவரும் நல்லபடியாகவே உள்ளார்” என்று கூறினார்.

- Advertisement -