ஐசிசி டி20 உ.கோ 2022 : களமிறங்கி விளையாடப்போகும் உத்தேச 11 பேர் இந்திய அணி இதோ

India Rohit Sharma
Advertisement

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற உலக கோப்பையில் விராட் கோலி தலைமையில் பாகிஸ்தானிடம் தோற்று லீக் சுற்றுடன் வெளியேறிய இந்தியா அதன்பின் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா தலைமையில் பங்கேற்ற அத்தனை தொடர்களையும் வென்று உலகின் நம்பர் ஒன் அணியாக முன்னேறியது. அதனால் உலக கோப்பையை வெல்லும் அணியாகக் கருதப்பட்ட இந்தியா சமீபத்திய ஆசிய கோப்பையில் சொதப்பி பைனலுக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.

IND

அதனால் இந்த அணியில் அதிரடியான மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஷமி, தீபக் சஹர் போன்ற வீரர்கள் ஸ்டாண்ட் பை லிஸ்டிலும் வாய்ப்புக்காக காத்திருக்கும் சஞ்சு சாம்சனுக்கு பதில் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளது அளித்துள்ளது. இதிலிருந்து ரசிகர்களின் கோரிக்கைக்கு கொஞ்சமும் செவி சாய்க்காத அணி நிர்வாகம் இந்த உலக கோப்பையில் களமிறக்கப் போகும் 11 கொண்ட உத்தேச அணியை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

டாப் ஆர்டர்: நியாயப்படி பார்த்தால் கேஎல் ராகுல் இந்த அணியில் இடம் பிடித்திருக்கவே கூடாது என்ற நிலைமையில் மீண்டும் துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதிலிருந்தே மீண்டும் அவர் தொடக்க வீரராக களமிறங்குவது உறுதியாகியுள்ளதால் அவருடன் கேப்டன் ரோகித் சர்மா மற்றொரு தொடக்க வீரராக களமிறங்குவார்.

IND Rohit Viat Kohli Bhuvanewar Kumar KL Rahul

மேலும் 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக டி20 அணியிலிருந்து நீக்குமாறு விமர்சித்த அத்தனை முன்னாள் வீரர்களையும் சமீபத்திய ஆசிய கோப்பையில் சதமடித்து கைதட்டி பாராட்ட வைத்து பார்முக்கு திரும்பியுள்ள விராட் கோலி 3வது இடத்தில் களமிறங்குவார்.

- Advertisement -

மிடில் ஆர்டர்: தற்சமயத்தில் எந்தவித சிந்தல் சிதறல் இல்லாமல் இந்திய பேட்டிங் வரிசையில் உச்சக்கட்ட பார்மில் இருக்கும் சூரியகுமார் யாதவ் 4வது இடத்தில் களமிறங்க தகுதியானவர். சூழலுக்கேற்ப 5வது இடம் முதல் ஓப்பனிங் வரை எங்கு வேண்டுமானாலும் களமிறங்கும் திறமை பெற்றுள்ள அவர் அனைத்து இடங்களிலும் அசத்தக் கூடியவர்.

Suryakumar Yadav

அதேபோல் கடந்த டி20 உலக கோப்பையில் தோல்வியடைவதற்கு சுமாராக செயல்பட்டு முக்கிய காரணமாக அமைந்து அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா அதன்பின் கடினமாக உழைத்து ஐபிஎல் 2022 கோப்பையை வென்று கம்பேக் கொடுத்தார்.

- Advertisement -

அதில் அற்புதமாக செயல்பட்டு பழைய பாண்டியாவாக பார்முக்கு திரும்பியுள்ள அவர் 5வது இடத்தில் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக விளையாடும் தகுதி பெற்றுள்ள நிலையில் 6வது இடத்தில் சுழல் பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக ஜடேஜா இல்லாததால் அக்சர் படேல் அல்லது தீபக் ஹூடா விளையாடக்கூடும்.

Dinesh-Karthik-and-Hardik-Pandya

மேலும் விக்கெட் கீப்பராகவும் பினிஷராகவும் தினேஷ் கார்த்தி களமிறங்குவார் என்று நம்பலாம். ஏனெனில் ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான முக்கியமான முதல் போட்டியில் ரிஷப் பண்ட்டுக்கு பதில் இவர்தான் தேர்வு செய்யப்பட்டார். அதில் வெற்றியும் வந்த நிலையில் அதன்பின் செய்த தேவையற்ற மாற்றம் தோல்வியை பரிசளித்தது. எனவே அந்த தோல்வி பாடத்தை மனதில் வைத்து உலக கோப்பையில் ரோகித் சர்மா இவரைத் தேர்வு செய்வார் என்று நம்பலாம்.

- Advertisement -

பவுலர்கள்: ஆஸ்திரேலிய மண்ணில் சுழல் பந்துவீச்சு அவ்வளவாக எடுபடாது என்ற நிலைமையில் அஷ்வின் இருந்தாலும் அவரை விட நல்ல பார்மில் முதன்மை சுழல்பந்து வீச்சாளர் என்ற பெயரை எடுத்துள்ள யுஸ்வென்ற சஹால் ஒரே முழுநேர ஸ்பின்னராக இந்த அணியில் விளையாடக்கூடும். அவர் இல்லாதது கடந்த உலக கோப்பையில் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியதை அணி நிர்வாகம் மறந்திருக்காது.

மேலும் சமீபத்திய ஆசிய கோப்பையில் இல்லாததால் தோல்வியை சந்திக்க நேரிட்ட ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் இந்த உலகக் கோப்பையில் முதன்மை வேகப் பந்துவீச்சாளர்களாக களமிறங்குவது உறுதியாகியுள்ளது. இவர்கள் வந்து விட்டதால் கடைசி நேரத்தில் ரன்களை வாரி வழங்கினாலும் அனுபவத்தைக் கருத்தில் கொண்டு புவனேஸ்வர் குமார் 3வது வேகப்பந்து வீச்சாளராக விளையாடுவார் என்று நம்பப்படுகிறது.

இவரை ஆரம்ப கட்டத்திலேயே பயன்படுத்தி இறுதிக்கட்டப் ஓவர்களை அந்த 2 பவுலர்களும் பார்த்துக் கொள்ளும் வகையில் அணி நிர்வாகம் திட்டமிடும் என்று எதிர்பார்க்கலாம். ஒருவேளை அதையும் தாண்டி சொதப்பினால் அதற்கடுத்த போட்டியில் இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷிதீப் சிங் சேர்க்கப்படுவார்.

IND vs ZIM Championsa

டி20 உலக கோப்பையில் களமிறங்கப் போகும் உத்தேச இந்திய 11 பேர் அணி இதோ:
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (கீப்பர்), அக்சர் படேல்/தீபக் ஹூடா, ஹர்ஷல் படேல், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வென்ற சஹால்.

Advertisement