விடியற்காலை 3.30 மணிக்கு பயிற்சியாளரின் வீட்டிற்கு சென்று மன்னிப்பு கேட்ட பண்ட் – காரணம் இதுதான்

Tarak
- Advertisement -

இந்திய அணியின் இளம் வீரரான விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் இந்திய அணிக்காக கடந்த 2017 ஆம் ஆண்டு அறிமுகமாகி விளையாடி வருகிறார். இதுவரை இந்திய அணிக்காக 20 டெஸ்ட் போட்டிகள், 18 ஒருநாள் போட்டிகள் மற்றும் 33 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக ரிஷப் பண்ட் விளையாடியுள்ளார். கடந்த சில மாதங்களாகவே வேற லெவலில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரிஷப் பண்ட் இந்திய அணியின் நட்சத்திர வீரராக தற்போது உருவெடுத்துள்ளார்.

Pant-3

- Advertisement -

இந்நிலையில் இளம் வயதில் அவரை பயிற்சி செய்த பயிற்சியாளர் தரக் சின்ஹா ரிஷப் பண்ட் குறித்த ஒரு சுவாரசியமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில் : ரிஷப் பண்ட்டை நான் பயிற்சி செய்த காலத்தில் ஒருமுறை வலைப்பயிற்சியின் போது திட்டிவிட்டேன். அதனால் விடியற்காலை ஒரு மணி நேரம் பயணம் செய்து மூன்று முப்பது (3.30 AM) மணிக்கு என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டான்.

டெல்லியிலிருந்து நான் இருக்கும் வீட்டிற்கு வந்த ரிஷப் பண்ட் என்னிடம் இப்படி மன்னிப்பு கேட்டது எனக்கு வியப்பாக இருந்தது. நான் வலைப் பயிற்சியின்போது அப்செட் ஆக இருந்ததால் ரிஷப் பண்ட்டை திட்டி விட்டேன். அதன் பிறகே அவர் விடியற்காலை வந்து என்னிடம் மன்னிப்பு கேட்டார். நான் ஏன் இந்த வேளையில் வந்து இப்படி மன்னிப்பு கேட்கிறாய் ? என்று ரிஷப் பண்டிடம் கேட்டதற்கு :

tarak 1

நான் உங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்தேன். இதுபோன்று உங்களை நான் அப்செட் ஆக இதுவரை பார்த்ததில்லை என்று ரிஷப் பண்ட் என்னிடம் கூறி கூறினார். நான் இப்படி பண்ட் மீது இப்படி கோபத்தை காட்டியதால் என் குடும்பத்தினர் கூட சிறிது வருத்தப்பட்டார்கள் என்று தரக் சிங் கூறினார். உத்தரகாண்டில் பிறந்த ரிஷப் பண்ட் தனது கிரிக்கெட் கரியர் காரணமாக டெல்லி ஐகானிக் கிளப் சன்னட் என்ற கிரிக்கெட் அகாடமியிலேயே கிரிக்கெட் பயிற்சி எடுத்தார். அவரது பயிற்சியாளர் தான் தரக் சின்ஹா.

tarak 2

2017 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான பண்ட் 2018 ஆம் ஆண்டு முதல் அணியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறார். மேலும் தற்போதுள்ள இந்திய அணியில் மிக முக்கிய வீரராக மூன்று வகையான கிரிக்கெட்டிலும் அவர் இடம் பிடித்து விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement