சோயிப் அக்தர் பந்துவீசும் போது நான் செத்துடுவேன்னு பயந்தேன் – வங்கதேச நட்சத்திர வீரர் பேட்டி

- Advertisement -

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக தற்போது உலகம் முழுவதும் நடைபெற இருந்த விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் கிரிக்கெட் போட்டிகளும் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் கிரிக்கெட் எப்போது துவங்கும் என்று தெரியாமல் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர்.

Akhtar

- Advertisement -

இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள இந்த ஓய்வு நேரத்தை பயன்படுத்தி பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி தற்போதைய வீரர்களும் தங்களது அனுபவத்தையும் தங்களின் கருத்துக்களையும் ரசிகர்களுக்கு நேரடியாக தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது பங்களாதேஷ் அணியின் தொடக்க வீரரான தமிழ் இக்பால் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான அக்தர் குறித்து தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

அதன்படி அவர் கூறியதாவது : எனக்கு மட்டும் இந்த நிலை ஏற்படவில்லை ஏராளமான பேட்ஸ்மேன்களுக்கு இதேபோன்று சூழ்நிலை நடைபெற்றுள்ளன. 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசிய ஏராளமான பந்துவீச்சாளர்களை நான் எதிர் கொண்டு உள்ளேன். ஆனால் முதன் முறையாக சோயிப் அக்தரை சந்திக்கும் போது அவரைப் பார்த்து மிகவும் பயந்தேன். இதை நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.

Tamim

அந்த நாளில் அவர் என்னைக் கொன்று விடுவார் என்று கூட நினைத்தேன். அந்த அளவுக்கு அவர் பயமுறுத்தும் நபராக இருந்தார். மேலும் அவரது வேகத்தில் என்னால் நிற்க முடியுமா என்று கூட யோசித்தேன் மேலும் அவரது பந்து வீச்சை கண்டு பயந்து நான் செத்தே போய் விடுவேன் என்று கூட நினைத்தேன் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

உலகின் அதிவேக பந்து வீச்சாளர் என்ற சாதனையை தன்வசம் வைத்திருக்கும் சோயப் அக்தர் தனது அச்சுறுத்தலான வேகம் மற்றும் துடிப்பான ரன்னிங் போன்றவற்றால் ரசிகர்களை கவர்ந்தது மட்டுமின்றி முன்னணி பேட்ஸ்மேன் எதிராக சிம்ம சொப்பனமாக விளங்கி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamim 1

வங்கதேச அணியின் துவக்க வீரரான தமீம் இக்பால் அந்த அணிக்காக 2007 ஆம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை 60 டெஸ்ட் போட்டிகள், 207 ஒருநாள் போட்டிகள் மற்றும் 78 டி20 விளையாடி உள்ளார். மேலும் பங்களாதேஷ் அணியின் அனுபவம் வாய்ந்த வீரர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement