- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பும்ரா மாதிரி ஜொலிக்க திறமை மட்டும் போதாது இது வேணும்.. உலகம் முழுக்க இதை செஞ்சுருக்காரு.. தமீம் இக்பால்

வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிராக விளையாடி வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. சென்னையில் செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 376 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அஸ்வின் 113, ஜடேஜா 86, ஜெய்ஸ்வால் 56 ரன்கள் எடுத்த நிலையில் வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக ஹசன் மஹ்முத் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம் 149 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக சாகிப் அல் ஹசன் 32 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதன் பின் 227 ரன்கள் முன்னிலையுடன் விளையாடும் இந்தியா இரண்டாவது நாள் முடிவில் 81-3 ரன்கள் குவித்து மொத்தம் 308 ரன்களை முன்னிலையாக பெற்று வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.

- Advertisement -

தரமான ஜஸ்ப்ரித் பும்ரா:

முன்னதாக 2024 டி20 உலகக் கோப்பைக்கு பின் இலங்கை தொடரில் ஓய்வெடுத்த பும்ரா 2 மாத இடைவெளிக்கு பின் இந்தியாவுக்காக இத்தொடரில் களமிறங்கியுள்ளார். அந்த வாய்ப்பில் வங்கதேச பேட்ஸ்மேன்களை தெறிக்க விட்ட அவர் 4 விக்கெட்டுகளை எடுத்தார். இதையும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகள் எடுத்த 6வது இந்திய வேகப்பந்து வீச்சாளராக ஜஸ்ப்ரித் பும்ரா சாதனையும் படைத்துள்ளார்.

இந்நிலையில் கிரிக்கெட்டில் திறமை மட்டுமின்றி நல்ல அறிவுமிக்க மூளை கொண்டிருந்தால் மட்டுமே பும்ரா போல அசத்த முடியும் என்று வங்கதேச நட்சத்திர முன்னாள் வீரர் தமீம் இக்பால் பாராட்டியுள்ளார். மேலும் இந்தியா மட்டுமின்றி உலகளவில் பும்ரா தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி நேரலை வர்ணனையில் பேசியது பின்வருமாறு. “பும்ராவிடம் அற்புதமான திறன் இருக்கிறது”

- Advertisement -

திறமை மட்டும் போதாது:

“அதே போல அவரின் தோள்களில் நம்ப முடியாத மூளையும் உள்ளது உங்களிடம் நிறைய திறமைகள் இருக்கலாம். ஆனால் உங்களுக்கு மூளை இல்லையென்றால் பும்ராவை போல வெற்றியடைய மாட்டீர்கள். அந்த 2 கலவையும் எதிரணிக்கு மிகவும் கொடியது. அதைச் சேர்த்து பும்ரா செய்வதே உலகம் பார்க்கிறது. நம்ப முடியாத வகையில் பந்து வீசும் பும்ராவின் பவுலிங் ஆக்சனை இந்தியாவில் இருப்பவர்கள் மட்டும் காப்பி அடிக்கவில்லை”

இதையும் படிங்க: இந்திய அணியில் அவரைப் பாத்து பொறாமைப்பட்டு.. அவர் மாதிரி வர ஆசைப்படுறேன்.. அஸ்வின் பேட்டி

“உலகம் முழுவதிலும் நிறைய பேர் செய்கிறார்கள் என்று உறுதியாக சொல்வேன். அந்தளவுக்கு உலக கிரிக்கெட்டில் அவர் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். இதற்கான பாராட்டுக்கள் அவரை கண்டறிந்து இன்று உலகம் பார்ப்பதற்கான ஆரம்பகட்ட மேடையை அமைத்துக் கொடுத்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு செல்ல வேண்டும்” என்று கூறினார்.

- Advertisement -