மெல்போர்னை ஓரங்கட்டி.. குஜராத்தின் மோடி மைதானத்தை மிஞ்சும் கோவை மைதானம்.. தமிழக அரசு அறிவிப்பு

Kovai Stadium
- Advertisement -

இந்தியாவில் கிரிக்கெட் அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்டு கொண்டாடப்பட்டு விளையாடப்படும் விளையாட்டாக இருந்து வருகிறது. அந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஒரு லட்சம் ரசிகர்கள் அமரக்கூடிய உலகின் மிகப்பெரிய மைதானம் இருந்து வந்தது. ஆனால் தற்போது குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் 1,20,000 அமரும் வகையில் புதிய மைதானம் கட்டப்பட்டு கடந்த சில வருடங்களுக்கு முன்பாக திறக்கப்பட்டது.

அதனால் மெல்போர்ன் மைதானத்தை முந்திய அகமதாபாத் மைதானம் உலகின் மிகப்பெரிய மைதானமாக சாதனை படைத்தது. அதற்கு இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரும் சூட்டப்பட்டுள்ளது. அப்போதிலிருந்தே 2023 உலகக் கோப்பை ஃபைனல், 2023 ஐபிஎல் தொடரின் ஃபைனல் உட்பட இந்தியாவில் நடைபெறும் முக்கியமான போட்டிகள் அகமதாபாத் நகரில் நடத்தப்பட்டு வருகின்றன.

- Advertisement -

கோவையில் பிரம்மாண்டம்:
இந்நிலையில் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோயம்புத்தூரில் உலகின் மிகப்பெரிய மைதானத்தை அமைக்க முடிவு எடுத்துள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தின் தலைநகர் சென்னையில் சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானம் நூற்றாண்டுகளாக பல வரலாற்று சிறப்புமிக்க போட்டிகளை நடத்தி வருகிறது. இருப்பினும் தற்போது அதை விட பெரிய மைதானத்தை கோவையில் அமைக்க உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது பற்றி தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “விளையாட்டு மற்றும் கிரிக்கெட் ஆர்வலர் என்ற முறையில் 2024 தேர்தலுக்கான எங்கள் தேர்தல் அறிக்கையில் மேலும் ஒரு வாக்குறுதியை சேர்க்க விரும்புகிறேன். கோயம்புத்தூரில் உள்ள விளையாட்டு ஆர்வலர்களின் பங்கேற்புடன் அங்கே அதிநவீன ஸ்டேடியம் அமைக்க முயற்சி எடுப்போம் என எமது அமைச்சர் டி.ஆர்.பி ராஜா குறிப்பிட்டுள்ளார்”

- Advertisement -

“இந்த மைதானம் சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்திற்கு பின் தமிழ்நாட்டின் 2வது சர்வதேச தரம் மிகுந்த மைதானமாக இருக்கும். நமது அரசும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தமிழ்நாட்டில் திறமைகளை வளர்ப்பதற்கும் விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கும் உறுதி பூண்டுள்ளது” என்று மாதிரி புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிப்பதற்காக சூரியகுமார் யாதவ் எடுத்துள்ள புதிய முயற்சி – விவரம் இதோ

மேலும் அந்த மைதானம் இந்தியாவிலேயே மிகப்பெரிய மைதானமாக இருக்கும் என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். அதனால் குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தை முந்தி கோயம்புத்தூர் மைதானம் உலகின் மிகப்பெரிய மைதானமாக கட்டப்படும் என்பது தெரிய வருகிறது. இந்த அறிவிப்பு தமிழக ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement