இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை தவறவிட்ட தமிழக வீரர்..! – யார் தெரியுமா..?

msdhoni
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி மோதும் 4 ஒரு நாள் போட்டிகள் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. அதற்கு முன்னதாக இந்தியா A அணி -இங்கிலாந்து லயன்ஸ் – வெஸ்ட் இண்டீஸ் மோதும் முத்தரப்பு போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த ஜூன் மாதம் 17 ஆம் தேதி தொடங்கிய இந்த முத்தரப்பு தொடரில் முதல் இரண்டு பயிற்சி ஆட்டத்திலும் வெற்றி பெற்றது.
vijayshankar
ஆனால் இந்த தொடரில் மிகவும் எதிர்ப்பாகபட்ட தமிழக வீரரான விஜய் ஷங்கர் முதல் போட்டியிலேயே சுதாப்பியுளளார். இந்த தொடரின் முதல் போட்டி டெர்பி மைதானத்தில் கடந்த 22 ஆம் தேதி நடைபெற்றது. இந்திய ஏ அணி மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணி மோதிய இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 46.3 ஓவருக்குள் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 232 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

முதல் பாதியில் இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 64 ரன்களை எடுத்திருந்தார். பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து லயன்ஸ் அணி 41.5 ஓவர்களில் இலக்கை அடைந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியில் மிட்டில் ஆர்டரில் களமிறங்கிய விஜய் ஷங்கர் முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

ஐபிஎல் போட்டிகலில் சிறப்பாக விளையாடி வந்த சஞ்சீவ் சாம்சன் , அம்பதி ராயுடு , மொஹமத் சமி போன்ற வீர்ர்கள் இந்திய அணியில் தேர்வாகி இருந்தனர். ஆனால், ‘யோ யோ’ பயிற்ச்சியில் தேர்ச்சி பெறாததால் இவர்கள் அனைவரும் இந்திய அணியில் இடம்பெறவில்லை. ஆனால், இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தும் அதனை விஜய் ஷங்கர் சரியாக பயன்படுத்தவில்லை என்பது சற்று ஏமாற்றமாக இருக்கிறது.

- Advertisement -
Advertisement