இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி 66 ரன்கள் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியை வீழ்த்தி 2 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று முடிந்தது.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அதிரடி வீரரான ஹர்திக் பாண்டியா 76 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 92 ரன்களையும், ஜடேஜா 50 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் என 66 ரன்கள் குவிக்க இந்திய அணி 302 ரன்கள் குவித்தது.
அதன்பின்னர் 303 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 289 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் மூலம் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளையும், தமிழக வீரரான நடராஜன் 2 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார். ஆட்டநாயகனாக ஹர்திக் பாண்டியா தேர்வானார்.
இந்நிலையில் நேற்று ஆஸ்திரேலியாவுக்கு அணிக்கு எதிரான கடைசி போட்டியில் இந்திய அணி சார்பில் சேலத்தை சேர்ந்த தமிழக கிரிக்கெட் வீரரான நடராஜன் பங்கேற்று விளையாடினார். தனது அறிமுக போட்டியிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் அவரை வாழ்த்தியுள்ளார்.
இந்தியாவிற்கான தன் முதல் போட்டியிலேயே, சவால்கள் நிறைந்த சூழ்நிலையிலும் தன் முத்திரையைப் பதித்து, தன் சர்வதேசப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியிருக்கும் நம் மண்ணின் மைந்தன் நடராஜனுக்கு வெற்றிகள் மென்மேலும் வந்து சேர வாழ்த்துகிறேன். @Natarajan_91 #AUSvsIND pic.twitter.com/tq8ScEWPSs
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) December 2, 2020
அவரிட்ட பதிவில் : “இந்தியாவிற்கான தனது முதல் போட்டியிலேயே சவால்கள் நிறைந்த சூழ்நிலையிலும் தன் முத்திரையைப் பதித்து தன் சர்வதேச பயணத்தை வெற்றியுடன் துவங்கியிருக்கும் நம் மண்ணின் மைந்தன் நடராஜனுக்கு வெற்றிகள் மென்மேலும் வந்து சேர வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.