- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அது நாட் அவுட் தான் யாரும் அழாதீங்க.. டி20 உ.கோ ஃபைனல் சூரியகுமார் கேட்ச் பற்றி சம்சி கருத்து

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. ஜூன் மாதம் நடைபெற்ற அத்தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் அசத்திய இந்தியா தோல்வியே சந்திக்காமல் 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வென்றது. குறிப்பாக மாபெரும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்தியா வெற்றி வாகை சூடியது.

முன்னதாக அப்போட்டியில் கடைசி ஓவரில் ஹர்டிக் பாண்டியா வேகத்தில் டேவிட் மில்லர் கொடுத்த கேட்ச்சை சூரியகுமார் யாதவர் பிடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது டேவிட் மில்லர் கொடுத்த கேட்சை கச்சிதமாக பிடித்த சூரியகுமார் பேலன்ஸ் இழந்தார். அதனால் பந்தை களத்திற்குள் தூக்கிப் போட்டு விட்டு பவுண்டரிக்குள் சென்ற அவர் மீண்டும் வந்து கேட்ச் பிடித்து இந்தியாவுக்கு கோப்பையை வென்று கொடுத்தார்.

- Advertisement -

நாட் அவுட் அழாதீங்க:

இருப்பினும் அப்போது சூரியகுமார் யாதவின் ஒரு கால் பவுண்டரியில் உரசியதாக பாகிஸ்தான் இலங்கை ரசிகர்கள் விமர்சித்தனர். அத்துடன் சூரியகுமார் கேட்ச் பிடிப்பதற்கு முன்பாகவே யாரோ இந்தியாவுக்கு சாதகமாக பவுண்டரியை சில அடிகள் பின்னோக்கி நகர்த்தி வைத்திருந்ததாகவும் அவர்கள் விமர்சித்தனர். அதற்கு பவுண்டரி போட்டியின் போகிற போக்கில் நகர்ந்திருந்ததாகவும் சூரியகுமார் சரியான கேட்ச் பிடித்ததாகவும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஷான் பொல்லாக் பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில் தென்னாப்பிரிக்க வீரர் தப்ரீஸ் சம்சி இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியோவை வைத்து சூரியகுமார் கேட்சை ஒப்பிட்டுள்ளார். அதாவது இந்தியாவின் ஏதோ ஒரு இடத்தில் நண்பர்கள் ஒரு போட்டியில் விளையாடுகின்றனர். அப்போது பேட்ஸ்மேன் அடித்த பந்தை சூரியகுமார் போல ஒரு ஃபீல்டர் பவுண்டரி எல்லையில் பிடிக்கிறார். இருப்பினும் அங்கே பவுண்டரி கயிறு இல்லாமல் குத்து மதிப்பான அளவு மட்டுமே உள்ளது.

- Advertisement -

இந்திய ரசிகர்கள் பதிலடி:

அதனால் அந்த ஃபீல்டர் கேட்ச்சா? இல்லையா? என்று தெரியாமல் அப்படியே நின்று கொண்டு அவுட் கேட்கிறார். அதன் பின் அம்பயர் உட்பட மற்ற அனைவரும் கயிற்றை எடுத்துச் சென்று அளவு வைத்து சோதித்து பார்க்கின்றனர். அப்போது அது சிக்ஸ் என்று தெரிய வருகிறது. அதை தன்னுடைய ட்விட்டரில் பகிர்ந்துள்ள தப்ரிஸ் சம்சி “இது போல உலகக் கோப்பை ஃபைனலில் அந்த கேட்ச்சை சோதித்திருந்தால் ஒருவேளை நாட் அவுட் வழங்கப்பட்டிருக்கும்” என்று ஜாலியாக பதிவிட்டார்.

இதையும் படிங்க: 2024 டி20 உ.கோ முதல் நாளில் ரோஹித், பாண்டியா பேசிக்கல.. அவர் தான் சேத்து வெச்சாரு.. விமல் குமார் பேட்டி

அதைப் பார்த்த இந்திய ரசிகர்கள் 2 மாதங்களாகியும் நியாயமான அவுட் பற்றி இன்னும் ஏன் அழுகிறீர்கள்? என்று அவருக்கு பதிலடி கொடுத்தனர். அதற்கு சம்சி “இது கேலிக்கூத்தாக பதிவிடப்பட்டது என்று சிலருக்கு புரியவில்லை. இங்கு யாரும் அழவில்லை. 4 வயது குழந்தையை போல் உங்களுக்கு சொல்கிறேன். இது வெறும் நகைச்சுவை” என்று மீண்டும் பதிலளித்துள்ளார்.

- Advertisement -