கடந்த 2007-ஆம் ஆண்டு அறிமுகமான டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவிற்கு மத்தியில் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்து வருகிறது. அந்த வகையில் 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரானது வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் நடைபெற இருக்கிறது.
இந்த தொடருக்கான அட்டவணைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு நாளை இந்த தொடரானது கோலாகலமாக துவங்க உள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள இந்த டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிவரை சென்று கோப்பையை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.
அதே வேளையில் இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே ரோகித் சர்மாவின் தலைமையில் அறிவிக்கப்பட்டு நியூயார்க்கில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் இந்திய அணியானது ஏ பிரிவில் இடம் பிடித்துள்ளது.
இந்த குரூப் ஏ பிரிவில் இந்திய அணியோடு சேர்த்து அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா, மற்றும் கனடா ஆகிய அணிகளுடன் இடம் பிடித்துள்ளது. இந்நிலையில் இந்த டி20 உலகக்கோப்பை தொடரை இந்தியாவில் எந்த சேனலில் ரசிகர்கள் கண்டுபிடிக்கலாம்? போட்டிகள் எப்போது துவங்கும்? என்பது குறித்த தகவலை இங்கு காணலாம்.
அதன்படி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறும் இந்த தொடரை இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும தொலைக்காட்சிகளின் மூலம் பார்க்கலாம் என்றும் ஆன்லைனில் வாயிலாக போட்டிகளை பார்க்க விரும்புவோர் ஹாட்ஸ்டார் ஆப்பின் மூலம் பார்க்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : பாண்டியாவை குறை சொல்லக்கூடாது.. இதனால் தான் கிரேக் சேப்பல் ரூட் வேலை செய்யல.. இர்பான் பதான்
அதோடு இந்திய நேரப்படி இந்த உலககோப்பை போட்டிகள் அனைத்தும் பெரும்பாலும் இரவு 8 மணிக்கு துவங்கும் படியே அட்டவணை வகுக்கப்பட்டுள்ளது. லீக் சுற்று போட்டிகள் அனைத்தும் அமெரிக்காவிலும் சூப்பர் 8 மற்றும் இறுதி கட்ட போட்டிகள் அனைத்தும் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.