டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணி 6 ஆம் தேதி அறிவிக்கப்படும் – யார் யாருக்கு இடம்

IND
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை தொடரானது இங்கு பரவி வந்த கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என ஐசிசி அறிவித்தது. அதன்படி வருகின்ற அக்டோபர் 17-ஆம் தேதி துவங்கும் இந்த டி20 உலகக்கோப்பை தொடரானது நவம்பர் 14ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

Cup

- Advertisement -

இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்க உள்ளன. அதில் 8 அணிகள் நேரடியாக பங்கேற்கும் என்றும் மீதம் உள்ள அணிகள் தகுதி சுற்று அடிப்படையில் பங்கேற்கும் என்றும் கூறப்பட்டது. இந்த தொடருக்கான அணி வீரர்களை ஏற்கனவே ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற அணிகள் அறிவித்த நிலையில் மற்ற நாடுகள் அவர்களது அணிகளை அறிவிக்க வருகிற 10-ஆம் தேதி வரை ஐசிசி கெடு விதித்துள்ளது.

இதன் காரணமாக செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் அனைத்து நாடுகளும் தங்களது அணிகளை தேர்வு செய்து அறிவிக்க வேண்டும். இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யார் ? யார் ? இடம் பெறுவார்கள் என்பதும், எந்தெந்த வீரர்களை கொண்டு அணியை தேர்வு செய்யவிருக்கிறார்கள் என்பதும் செப்டம்பர் 6ஆம் தேதி அல்லது 7 ஆம் தேதி தெரியவரும் என்று கூறப்படுகிறது.

IND

ஏனெனில் தற்போது இந்திய அணி இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருவதால் 4வது டெஸ்ட் போட்டி முடிந்து அணி வீரர்களின் தேர்வு குறித்த கூட்டம் நடைபெறும் என்றும் அதன்பிறகு டி20 உலக கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணியை அதிகாரபூர்வமாக செப்டம்பர் 6ஆம் தேதி அல்லது 7 ஆம் தேதி அறிவிப்பார்கள் என்று தெரிய வந்துள்ளது.

இந்த டி20 உலக கோப்பை தொடரில் சர்ப்ரைஸ் தேர்வாக நிச்சயம் சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் தேர்வாவார்கள் என்றும் அதே போன்று ரிசர்வ் வீரர்களாக தமிழக வீரர்களான நடராஜன் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement