- Advertisement -
ஐ.பி.எல்

கிடைச்ச ஒரு வாய்ப்பும் வேஸ்ட்டா போச்சு.. இனி சான்ஸ் கிடைக்குறது கஷ்டம் – நடராஜனுக்கு நேர்ந்த சோகம்

கடந்த பல ஆண்டுகளாக சன்ரைசர்ஸ் அணிக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்த தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் 2024 ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு அந்த அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பின்னர் 2025 ஐ.பி.எல் தொடருக்கான மெகா ஏலத்தில் கலந்து கொண்ட அவரை எடுக்க பல அணிகளில் மத்தியிலும் பலத்த போட்டி இருந்தது. இறுதியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியாது அவரை 10 கோடிக்கு மேல் பெரிய தொகை கொடுத்து ஏலத்தில் எடுத்திருந்தது.

டி நடராஜனுக்கு நேர்ந்த சோகம் :

டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளராக தமிழக முன்னாள் வீரரான ஹேமந்த் பதானி இருப்பதினால் அவருக்கு நிச்சயம் டெல்லி அணியின் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த தொடரின் ஆரம்ப கட்ட போட்டிகளில் காயம் காரணமாக அவரால் சில போட்டிகளில் விளையாட முடியவில்லை.

- Advertisement -

பின்னர் மீண்டும் விளையாடும் அளவிற்கு முழு பிட்டாக இருந்தும் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் டெல்லி அணிக்காக இந்த சீசனில் முதல்முறையாக நடராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்படி கிடைத்த முதல் வாய்ப்பும் மழையால் பரிபோனது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று டெல்லி மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையே ஹைதராபாத் நகரில் நடைபெற்ற 55-வது லீக் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் குவித்தது.

- Advertisement -

பின்னர் 134 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களமிறங்க இருந்தபோது மழை பெய்ததால் போட்டி சிறிது நேரம் தடைபட்டது. பின்னர் நீண்ட நேரம் ஆகியும் மழை நிற்காத காரணத்தினால் போட்டி கைவிடப்பட்டது. இந்த போட்டியின் இரண்டாம் பாதியில் நடராஜன் எவ்வாறு பந்துவீசப்போகிறார்? என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் மழை காரணமாக அவரால் இந்த போட்டியில் பந்துவீச முடியாமல் போனது.

இதையும் படிங்க : 24 மணி நேர வேதனை.. தோத்தாலும் இந்தியா கேப்டன்ஷிப்பை விட்டு ஆர்சிபி’யிலேயே இருக்க இதான் காரணம்.. கோலி

இன்னும் டெல்லி அணிக்கு 3 ஆட்டங்கள் மட்டுமே லீக் கூற்றில் எஞ்சியுள்ள வேளையில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற இன்னும் 2 வெற்றிகள் அந்த அணிக்கு தேவை என்பதால் நிச்சயம் அடுத்த மூன்று போட்டிகளுக்கு நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்காது என்று தெரிகிறது.

- Advertisement -