இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே இவர்தான் சிறந்த கேப்டன் – சையத் கிர்மானி பேட்டி

Kirmani
- Advertisement -

இந்திய அணி தற்போது வரை மூன்று உலகக் கோப்பை தொடர்களை வென்றுள்ளது. கபில்தேவ் தலைமையில் 1983 ஆம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரையும், 2007 ஆம் ஆண்டில் தோனி தலைமையில் டி20 உலக கோப்பை தொடரையும் மீண்டும் அதே தோனியின் தலைமையில் 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரையும் வென்றது.

Dhoni

- Advertisement -

இருந்தாலும் தற்போது வரை யார் இந்திய அணியின் சிறந்த கேப்டன்? என்ற பேச்சுக்கள் அவ்வப்போது வந்து கொண்டேதான் இருக்கிறது. ஒரு சாரார் கபில்தேவ் என்றும், ஒரு சாரார் தோனி என்றும், மற்றொரு சாரார் சௌரவ் கங்குலி என்றும் கூறிவருகின்றனர். இந்நிலையில் முன்னாள் இந்திய வீரரான சையத் கிர்மானி, தோனி தான் மிகச் சிறந்த கேப்டன் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது. என்னைப் பொருத்தவரையில் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த கேப்டன் என்றால் அது தோனி தான். மற்றவர்களுக்கு இது சற்று கடினமாகத்தான் இருக்கும். மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் அவருக்கு ஈடான நற்சான்றிதழ் வேறு யாருக்கும் இல்லை. அந்த அளவிற்கு அவருக்கு மரியாதை இந்தியாவில் இருக்கிறது.

Dhoni

நான் இப்படி சொல்வதால் மற்ற வீரர்களுக்கு சற்று காயத்தை ஏற்படுத்தும். ஆனால் இதுதான் உண்மை. அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலும் டோனி தனது எதிர்காலத்தை சரியாக கணித்து வைத்திருக்கிறார். அதனால்தான் அமைதியாக இருக்கிறார். அவர் மீண்டும் இந்திய அணிக்கு விளையாடுவாரா என்று கேட்டால் இல்லை என்றுதான் கூறுவேன்.

Dhoni-1

ஏற்கனவே தனது கனவுகளையும் குறிக்கோளை அடைந்து எட்டிப்பிடித்துவிட்டார் . இதற்கு மேலும் சாதிப்பதற்கு எதுவும் இல்லை. இந்த முடிவை தோனி தான் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் சையது கிர்மானி. டோனி இந்திய அணிக்காக மட்டுமின்றி ஐ.பி.எல். போட்டியிலும் சாதித்தார். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐ.பி.எல். கோப்பையை 3 முறை (2010, 2011, 2018) பெற்றுக் கொடுத்தார். 5 தடவை இரண்டாவது இடத்தை பிடித்தது.

Advertisement