ஐபிஎல் தொடரின் 11 ஆம் சீசன் கடந்த மே மாதம் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி 3 வது முறையாக கோப்பையை கைப்பற்றியது என்பது நம் அனைவருக்கும் தெரியும், இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் சி எஸ் கே அணியில் சிறப்பாக செயல்பட்டதால் வாட்ஸனுக்கு உள்ளூர் அணியில் பதிவிக்காலம் நீண்டுள்ளது.
இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் விளையாடிய வாட்சன் சிறப்பாக விளையாடி வந்தார். ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் விளையாடிய வாட்சன் 555 ரன்களை குவித்தார். மேலும் சமீபத்தில் தனியார் நிறுவனம் ஒன்று ஐபிஎல் போட்டிகளில் மதிப்புமிக்க வீரர்கள் பட்டியலில் வாட்ஸனின் பெயரும் இடம்பெற்றிருந்தது.
இதையடுத்து வாட்ஸனின் டிமாண்ட் அதிகமாக, அவர் ஐபிஎல் தொடருக்கு பின்னர் நல்ல ஆட்டத்திறனில் உள்ளார் என்று அனைவரும் நினைத்து வருகின்றனர். சர்வதேச போட்டிகளில் இருந்து 2015-ல் ஓய்வுபெற்ற வாட்சன், தற்போது பிக்பேஷ் லீக் போட்டியில், சிட்னி தண்டர் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். தற்போது ஐபிஎல் போட்டிக்கு பிறகு இவரின் பார்ம்மை அறிந்த அணி நிர்வாகம் அவரது ஒப்பந்தத்தை மேலும் 2 வருடத்துக்கு நீட்டித்துள்ளது.
இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த வாட்சன் ‘பிக்பேஷ் லீக் போட்டிகள் அடுத்த தலைமுறை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களையும் உருவாக்கி வருகிறது. தற்போது சிட்னி தண்டர் அணியில் எனது ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டிருப்பது உற்சாகமாக இருக்கிறது. ஐபிஎல்- தொடர்களில் சிறப்பாக விளையாடினேன்அது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.