அஷ்வின் சொல்வது சரியே, அந்த ரூல்சை தடை செய்யணும் – நியூஸிலாந்து வீரர் ஆதரவு, எதற்கு தெரியுமா

- Advertisement -

கிரிக்கெட்டில் பேட்டும் பந்தும் சரிசமமாக மோதிக் கொண்டால் தான் பரபரப்பும் விறுவிறுப்பும் ஏற்பட்டு உண்மையான போட்டியை ரசிகர்களால் கண்டுகளிக்க முடியும். அதற்கு தரமான பேட்ஸ்மேன்களும் பவுலர்களும் சமமாக மோதிக் கொள்வது அவசியமாகும். கிரிக்கெட் துவங்கப்பட்ட ஆரம்ப காலத்தில் அதற்கேற்றார் போல் தான் அடிப்படை விதி முறைகளும் அமைக்கப்பட்டு பவுலர்களும் பேட்ஸ்மேன்களும் சம அளவில் மோதிக் கொண்டார்கள். அதனாலேயே அந்த காலத்தில் 50 ஓவர்களில் 200 ரன்களை பார்ப்பதே கடினமாக பார்க்கப்பட்டது.

Rohit Sharma Six

ஆனால் ரசிகர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக தற்போதைய நவீன கிரிக்கெட்டில் ஏராளமான விதிமுறைகள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவும் பவுலர்களுக்கு பாதகமாகவும் ஐசிசியே கொண்டு வந்துள்ளது. எடுத்துக்காட்டாக ஒரு இன்னிங்ஸ்க்கு 2 புதிய பந்துகள், குறிப்பிட்ட ஓவர்களுக்கு உள்வட்டத்துக்கு வெளியே குறிப்பிட்ட பீல்டர்களுக்கு மட்டுமே அனுமதி போன்ற விதிமுறைகளை கூறலாம்.

- Advertisement -

இதனால் சமீப காலங்களில் பேட்ஸ்மேன்கள் 20 ஓவர்களில் 250 ரன்களை அடித்து ரசிகர்கள் மகிழ்வதை பார்க்க முடிகிறது. ஆனால் அதற்கு பலிகடாக பவுலர்களின் நிலைமைதான் திண்டாட்டமாக மாறிவிட்டது. இந்த அநீதியான விதிமுறைகளுக்கு எதிராக நிறைய பேர் வாய் வார்த்தையாக பேசினாலும் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் களத்திலேயே தைரியமாக சில செயல்களை செய்து காட்டி சமமான போட்டிக்கு போராடி வருகிறார்.

Ashwin Buttler Mankad

சுவிட்ச் ஹிட்:
பவுலர்கள் கிரீஸ் எனப்படும் வெள்ளைக்கோட்டை ஒருசில இன்ச்கள் தாண்டி பந்து வீசினால் உடனடியாக அதற்கு தண்டனையாக பிரி-ஹீட் வழங்கப்படுகிறது. ஆனால் பெரும்பாலான பந்துகளை வீசுவதற்கு முன்பாக எதிர்ப்புறம் இருக்கும் பேட்ஸ்மென்கள் ரன்கள் எடுப்பதற்காக அதே வெள்ளை கோட்டை சில அடிகள் முன்கூட்டியே தாண்டினால் மட்டும் யாரும் பேசுவதில்லை. எனவே அதை கருத்தில் கொண்ட அவர் ஐபிஎல் தொடரில் ஜோஸ் பட்லரை மன்கட் முறையில் ரன் அவுட் செய்தது சர்ச்சையாக வெடித்தது.

- Advertisement -

இருப்பினும் விதிமுறைகளுக்கு உட்பட்டே நடந்துகொள்கிறேன் என்று விடாப்பிடியாக இருந்த அவரின் நியாயத்திற்கு வெற்றியாக சமீபத்தில் கிரிக்கெட் விதிமுறைகளை நிர்வாகிக்கும் எம்சிசி தாமாக முன்வந்து மன்கட் அவுட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதனால் உத்வேகமடைந்த அஷ்வின் அடுத்ததாக சுவிட்ச் ஹிட் அதாவது வலதுகை பேட்ஸ்மேனாக இருப்பவர் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக கடைசி நிமிடத்தில் திடீரென இடது பக்கம் திரும்பி சிக்ஸர்கள் போன்ற பெரிய ரன்களை எடுப்பதற்கு எதிராக பேச துவங்கியுள்ளார்.

maxwell

அதாவது விதிமுறைப்படி அந்த நேரத்தில் அந்த வகையில் ரன்கள் எடுப்பது சரியானது தான். ஆனால் அதை தவறவிட்டால் பந்து காலில் படும்போது லைன் மாறியிருக்கும் என்பதை மையமாக வைத்து அம்பயர்கள் விதிமுறைப்படி எல்பிடபிள்யூ கொடுப்பதில்லை. எனவே அந்த வகையில் சிக்ஸர் அடிப்பது அவர்களது திறமை ஆனால் அதை தவறவிடும்போது பவுலர்கள் எல்பிடபிள்யூ கேட்டால் அம்பயர்கள் அவுட் கொடுக்க வேண்டும் என்று அஸ்வின் நியாயமான கோரிக்கை வைத்துள்ளார்.

- Advertisement -

இதுபற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் சில தினங்களுக்கு பேசியது பின்வருமாறு. “பேட்ஸ்மேன்கள் சுவிட்ச் ஹிட் அடிக்கட்டும் ஆனால் அவர்கள் தவற விட்டால் எங்களுக்கு எல்பிடபிள்யூ கொடுங்கள். பேட்ஸ்மேன்கள் திரும்பினால் அதற்காக எல்பிடபிள்யூ கிடையாது என்று உங்களால் எவ்வாறு கூறமுடியும்? எனவே அதை அவுட் கொடுத்தால் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சமமான போட்டி உருவாகத் துவங்கும்” என்று கூறினார்.

இந்நிலையில் ரவிச்சந்திரன் அஷ்வின் மிகச் சிறப்பான புள்ளியை மீண்டும் பேசியுள்ளார் என்று பாராட்டும் முன்னாள் நியூசிலாந்து வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் ரிவர்ஸ் ஸ்வீப் போன்ற ஷாட்களை பேட்ஸ்மேன்கள் விளையாடுவதில் எந்த தவறுமில்லை ஆனால் சுவிட்ச் ஹிட் என்ற ஷாட்டை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்று அஷ்வினை விட ஆழமான கோரிக்கை வைத்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அவரின் தீர்வுகளை நான் முழுமையாக நிராகரிக்கிறேன். சுவிட்ச் ஹிட் அடிப்பது பேட்ஸ்மேன்களான எங்களுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அதை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் கேப்டன் மற்றும் பவுலர்களுக்கு ஒரு பந்துக்கு முன்பாக குறிப்பிட்ட இடத்துக்குள் தான் பீல்டர்களை நிறுத்த வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளது”

Styris 1

“எனவே பேட்ஸ்மேன் மட்டும் திடீரென்று தனது கையையும் காலையும் மாற்றி அடிப்பதை நான் விரும்பவில்லை. நீங்கள் ரிவர்ஸ் ஸ்வீப் அல்லது ரிவர்ஸ் ஹிட் ஷாட்களை அடியுங்கள். ஆனால் இதை நான் விரும்பவில்லை. எடுத்துக்காட்டாக கெவின் பீட்டர்சன் முழுமையாக இடதுகை பேட்ஸ்மேனாக மாறி அந்த ஷாட்டை அடிப்பார். எனவே சுவிட்ச் ஹிட்டை விட்டுவிட்டு ரிவர்ஸ் ஸ்வீப் மாதிரியான ஷாட்களை பேட்ஸ்மேன்கள் விளையாடும்போது அஸ்வின் கூறுவதுபோல எல்பிடபிள்யூ விதிமுறையை பற்றி கவலைப்படத் தேவையில்லை. அது அனைவருக்கும் சமமான போட்டியை ஏற்படுத்தும்” என்று தெரிவித்தார்.

Advertisement