இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது போட்டி அக்டோபர் 2ஆம் தேதி விசாகப்பட்டினம் மைதானத்தில் துவங்கி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் தங்கள் கைகளில் “ஸ்வச் பாரத்” என்ற வாசகம் கொண்ட குறியீட்டினை தங்கள் ஜெர்சியில் பதித்து விளையாடி வருகின்றனர்.
இதன் காரணம் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் இந்தச் செய்தி அதிக அளவில் பகிரப்பட்டும் வருகிறது. அது யாதெனில் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி பிறந்த நாள் என்பதால் ஸ்வச் பாரத் எனும் வாசகம் தேசத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள் என்று பிரதமர் மோடி கொண்டு வந்த திட்டத்தை மையமாக வைத்து காந்தி பிறந்த நாளன்று தேசத்தை தூய்மையாக வைத்துக் கொள்வோம் என்பதே ஆகும்.
இதனை மக்களுக்கு தெரிவிக்கவே வீரர்கள் தங்கள் கைகளில் அந்த குறியீட்டை ஒட்டி விளையாடினார்கள் என்று தகவல்கள் இந்திய அணி நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காந்தி பிறந்த நாளன்று இந்த நல்ல செயலை செய்ய வேண்டும் என்று பலரும் இந்த பதிவை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.