
ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இழந்துள்ள வேளையில் அடுத்ததாக நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. ஒருநாள் தொடரில் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக இந்த டி20 தொடரை கைப்பற்றும் முனைப்புடன் தற்போது இந்திய அணியின் வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டுள்ள வேளையில் இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணியானது தொடர்ச்சியாக பல வெற்றிகள் பெற்று தற்போது பலமான அணியாக இருந்து வரும் வேளையில் அடுத்த ஆண்டு 2026 உலகக்கோப்பையை கைப்பற்றும் நோக்கில் சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆஸ்திரேலிய தொடரிலும் சில குறைகளை சரி செய்வோம் என கேப்டன் சூரியகுமார் யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் அடுத்த 2026 ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இந்தியா, இலங்கையில் உலக கோப்பை தொடரானது நடைபெற உள்ள வேளையில் அதற்கு முன்னதாக இந்த ஆஸ்திரேலிய தொடர் மிக முக்கியமான தொடராக மாறியுள்ளது.
இந்நிலையில் இந்த ஆஸ்திரேலிய தொடரின் போது இந்திய அணியில் இருக்கும் பீல்டிங் பிரச்சனைகளை சரி செய்வோம் என்று சூரியகுமார் யாதவ் பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : என்னை பொறுத்தவரை கேட்ச்கள் தவறவிடப்படும். நீங்கள் ஒரு பீல்டராக இருந்தால் கேட்ச் பிடிப்பீர்கள் அல்லது தவறவிடவும் செய்வீர்கள்.
அதே போன்று பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர் என அனைவருக்குமே ஒரு சிறப்பான நாள், ஒரு மோசமான நாள் என இரண்டும் இருக்கும். ஆனால் பீல்டிங்கில் எப்போதும் கேட்சை விட்டால் சரி என்று அர்த்தம் இல்லை. கேட்சை தவறவிட்ட பிறகு போட்டியின் முடிவே மாறி வருவதை பல போட்டிகளாக பார்த்து வருகிறோம். அந்த வகையில் இனி இந்திய அணியை பீல்டிங்கில் பலமான அணியாக மாற்றும் முனைப்புடன் நாங்கள் தயாராகி வருகிறோம்.
இதையும் படிங்க : ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 தொடரில் ஷிவம் துபே பந்துவீசுவாரா? – கேப்டன் சூரியகுமார் யாதவ் பதில்
அதேபோன்று கேட்சை தவறவிடாமல் பிடிக்கவும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். பீல்டிங்கில் கடினமாக உழைக்க வேண்டும். அப்படி சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே போட்டிகளில் வெற்றி பெற முடியும். அதனால் இம்முறை பீல்டிங்கில் அதிக பயிற்சிகளை மேற்கொள்வோம் என சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.