நியூசிலாந்து டி20 தொடரில் ரிங்கு சிங் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் விளையாடுவார்களா? – சூரியகுமார் யாதவ் பதில்

Rinku and Ishan Kishan
- Advertisement -

அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கும் 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி கடந்த டிசம்பர் 20-ஆம் தேதி பி.சி.சி.ஐ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அணியில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையில் 15 வீரர்களுக்கு இடம் அளிக்கப்பட்டது. அந்த அணியில் துணை கேப்டன் சுப்மன் கில் நீக்கப்பட்டு அக்சர் படேல் மீண்டும் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

ரிங்கு சிங் மற்றும் இஷான் கிஷன் கண்டிப்பா ஆடுவாங்க : சூரியகுமார் யாதவ்

சுப்மன் கில் மற்றும் ஜிதேஷ் சர்மா ஆகியோருக்கு பதிலாக ரிங்கு சிங் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இப்படி டி20 உலக கோப்பை அணியிலிருந்து துணை கேப்டனை அதிரடியாக நீக்கி நிர்வாகம் இளம் வீரர்களான ரிங்கு சிங் மற்றும் இஷான் கிஷனுக்கு வாய்ப்பை வழங்கியுள்ளது பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

- Advertisement -

ஏனெனில் திறமையான வீரர்களுக்கு சரியான ஃபார்மில் இருக்கும்போது அணியில் வாய்ப்பு கிடைக்க வேண்டும். அந்த வகையில் டி20 போட்டியில் சிறப்பாக பினிஷிங் செய்து வரும் ரிங்கு சிங் மற்றும் அசத்தலான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் இஷான் கிஷான் ஆகியோரை சேர்த்தது சரிதான் என்று பலரும் கூறி வருகின்றனர்.

இந்த அணியே நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் விளையாட இருப்பதால் இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர்கள் இருவருக்கும் விளையாட வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு பதில் அளித்துள்ள கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில் :

- Advertisement -

நாங்கள் ஒரே மாதிரியான பிளேயிங் லெவன் தான் டி20 உலக கோப்பை தொடர் முழுவதும் விளையாடுவோம் அதற்கு முன்னதாக நியூசிலாந்து தொடர் நடைபெற இருப்பதால் இந்த தொடரில் ரிங்கு சிங் மற்றும் இஷான் கிஷன் ஆகியோருக்கு நிச்சயம் நேரம் வரும்போது வாய்ப்பு கொடுப்போம். அப்படி அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் பட்சத்தில் அதனை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படிங்க : திலக் வர்மா அந்த இடத்திலும், நான் இந்த இடத்திலும் விளையாடுவோம்.. அதுதான் பிளான் – சூரியகுமார் யாதவ் கருத்து

ஒருமுறை நாங்கள் அவருக்கு வாய்ப்பு வழங்கினால் நிச்சயம் நீண்ட ஒரு பயணத்தையும் கொடுப்போம். அவ்வளவு எளிதாக பிளேயிங் லெவனில் மாற்றங்கள் இருக்காது. அதேபோன்று எந்த அணியாக இருந்தாலும் பிளேயிங் லெவன் பலமாக இருக்கும் படி காம்பினேஷனில் தான் விளையாடுவோம் எனும் சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement