கடந்த 2024-ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. அந்த வெற்றிக்கு பிறகு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அனுபவ வீரர்களான விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஒட்டுமொத்தமாக சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து தங்களது ஓய்வை அறிவித்திருந்தனர். அதற்கடுத்து இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக ஹார்டிக் பாண்டியா நியமிக்கப்படுவார் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் இருந்தது.
நான் கேப்டனாக நியமிக்கப்பட இந்த 4 பேர் தான் காரணம் : சூரியகுமார் யாதவ்
ஆனால் அவ்வேளையில் ஹார்டிக் பாண்டியாவின் தனிப்பட்ட சூழல் சரியில்லாத காரணத்தால் சூரியகுமார் யாதவ் டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அப்படி அவர் கேப்டன் பதவியை ஏற்றதிலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த ஒரு டி20 தொடரையும் இழக்காமல் சிறப்பாக செயல்பட்டு வந்தது. அதுமட்டுமின்றி நடைபெற்று முடிந்த 2026 டி20 உலக கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தையும் வென்று அடுத்தடுத்த டி20 உலக கோப்பைகளை கைப்பற்றிய அணியாக சாதனை நிகழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் மகேந்திர சிங் தோனி, ரோகித் சர்மா ஆகியோருக்கு அடுத்து டி20 உலக கோப்பையை கைப்பற்றி கொடுத்த மூன்றாவது இந்திய கேப்டன் என்ற பெருமையும் சூரியகுமார் யாதவ் அடைந்தார். இந்நிலையில் தான் டி20 அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட காரணமே நான்கு பேர் தான் என அவர்களது பெயரை தற்போது சூரியகுமார் யாதவ் வெளியிட்டுள்ளார்.
அப்படி அவர் வெளியிட்டுள்ள அந்த பெயர்களில் : அப்போதைய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா, தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர், முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா ஆகிய நால்வரும் இணைந்து தன்னை கேப்டனாக மாற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஜெய் ஷா தான் தன்னை முதலில் அழைத்து இந்த பதவி குறித்து பேசியதாகவும் சூரியகுமார் யாதவ் தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க : ரவீந்திர ஜடேஜாவிற்கு மாற்றுவீரர் நானா? அதெல்லாம் அவ்ளோ ஈஸி கிடையாது – பிரஷாந்த் வீர் ஓபன்டாக்
கௌதம் கம்பீர் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக வந்ததும் ஏற்கனவே அவரின் கீழ் விளையாடியிருந்த சூரியகுமார் யாதவை அவர் தான் கேப்டனாக நியமித்திருப்பார் என்று பலரும் நினைத்து வந்த வேளையில் இந்த குறிப்பிட்ட நான்கு நபர் தான் தன்னை கேப்டனாக மாற்றினார்கள் என சூரியகுமார் யாதவ் வெளிப்படையாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



