- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டி20 உலககோப்பை தொடருக்கு முன் இந்த 3 தொடர்களில் விளையாடுவது ரொம்ப சூப்பரா இருக்கு – சூரியகுமார் ஹேப்பி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது நேற்று பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற ஐந்தாவது மற்றும் இறுதிப் போட்டியுடன் நிறைவுக்கு வந்தது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி 4.5 ஓவர்களில் 52 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது,

இந்த 3 தொடரில் அடுத்தடுத்து விளையாடுவது மகிழ்ச்சி : சூரியகுமார் யாதவ்

பின்னர் நீண்ட நேரம் ஆகியும் மழை நிற்காத காரணத்தினால் இந்த போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே இந்த தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட வேளையில் ஐந்தாவது போட்டியும் மழையால் கைவிடப்பட்டது. இதன் காரணமாக இந்த 5 போட்டிகள் கொண்ட தொடரின் மூன்று ஆட்டங்களில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகுத்த இந்திய அணியானது இந்த தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து இந்த தொடரில் அடைந்த வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அடுத்தடுத்து மூன்று முக்கிய தொடர்களில் விளையாட இருப்பது டி20 உலக கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் உதவுவதாக தெரிவித்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :

தற்போது நாங்கள் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி முடித்துள்ளோம். அடுத்ததாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராகவும், நியூசிலாந்து அணிக்கு எதிராகவும் நடைபெற இருக்கும் மிகப்பெரிய டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறோம். இப்படி மூன்று பலமான அணிகளுக்கு இடையேயான தொடர்களில் விளையாடுவது மூலம் உலகக்கோப்பை தொடருக்கு சரியான முறையில் தயாராக உதவும் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

அண்மையில் நடைபெற்ற மகளிர் உலககோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதேபோன்று இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணிக்கு ரசிகர்களிடமிருந்து நம்ப முடியாத அளவு வரவேற்பு கிடைத்தது. சொந்த மண்ணில் விளையாடும்போது எப்போதும் ரசிகர்களது ஆதரவு இருந்தாலும் கூடுதல் அழுத்தம் இருக்கும். ஏனெனில் இந்திய அணி வெற்றி பெற்றே ஆக வேண்டிய பொறுப்பு நம் கையில் உள்ளது.

இதையும் படிங்க : 5 ஆவது போட்டி நின்ன கையோடு விமானத்தை பிடித்து கொல்கத்தாவுக்கு பறந்த 4 வீரர்கள் – என்ன அர்ப்பணிப்பு

எனவே சொந்த மண்ணில் விளையாடும் போது ஆதரவு அதிகம் இருந்தாலும் அதே வேளையில் அழுத்தமும் இருக்கும். டி20 உலக கோப்பை தொடரானது இந்தியாவில் நடைபெற இருப்பதினால் நிச்சயம் எங்களுக்கும் அதே ஆதரவு கிடைக்கும் என்று நினைக்கிறேன். அந்த தொடரினை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -