IND vs SA : ஷிகர் தவானின் வரலாற்று சாதனையை தகர்த்து புதிய உலகசாதனை படைத்த சூர்யகுமார் – பட்டியல் இதோ

Suryakumar Yadav vs RSA
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை போராடி கைப்பற்றி ஆசிய கோப்பை தோல்வியிலிருந்து மீண்டெழுந்த இந்தியா அடுத்ததாக தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. உலக கோப்பைக்கு முன்பாக கடைசியாக நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டி செப்டம்பர் 28ஆம் தேதியன்று கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா பவுலிங்க்கு சாதகமான திருவனந்தபுரம் மைதானத்தில் இந்திய பவுலர்களின் நெருப்பான பந்து வீச்சில் 20 ஓவர்களில் 106/8 ரன்கள் மட்டுமே எடுத்தது.

INDvsRSA-Toss

- Advertisement -

கேப்டன் பாவுமா 0, டீ காக் 1, ரோசொவ் 0, மில்லர் 0, ஸ்டப்ஸ் 0 என அந்த அணியின் டாப் 5 பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்த ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்ததால் 9/5 என்ற படுமோசமான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் மானத்தை காப்பாற்றிய மார்க்கம் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 25 (24) ரன்களும் வேன் பர்ணல் 24 (37) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் அதிரடி காட்டிய கேசவ் மகாராஜ் 5 பவுண்டரி 2 சிக்சருடன் 41 (35) ரன்களை விளாசி ஓரளவு காப்பாற்றிய நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

மிரட்டிய சூர்யா:
அதை தொடர்ந்து 107 என்ற சுலபமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா டக் அவுட்டாக விராட் கோலி 3 (9) ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அதனால் 17/2 என சுமாரான தொடக்கத்தை பெற்ற இந்தியாவுக்கு அடுத்ததாக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அதிரடியாக பேட்டிங் செய்ய மற்றொரு தொடக்க வீரர்கள் ராகுல் கம்பெனி கொடுக்கும் வகையில் பேட்டிங் செய்தார். ஆரம்பத்தில் நிதானத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நேரம் செல்ல செல்ல அதிரடி காட்டியது.

KL Rahul Suryakumar Yadav IND vs RSA

இதில் ஒருபுறம் வழக்கம்போல நாலாபுறமும் சுழன்றடித்த சூர்யகுமார் யாதவ் 5 பவுண்டரி 3 சிக்சருடன் 50* (33) ரன்கள் விளாசி 16.4 ஓவரில் 110/2 ரன்களை எடுக்க வைத்து இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தார். அவருடன் கம்பெனி கொடுத்த ராகுல் 2 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 51* (56) ரன்கள் எடுத்து ஓரளவு பார்முக்கு திரும்பினார். இந்த வெற்றியால் 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்று இந்தியா அசத்தியுள்ளது. இந்த வெற்றிக்கு 3 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றிய அர்ஷிதீப் சிங் ஆட்டநாயகன் விருதை வென்றாலும் பேட்டிங்க்கு சவாலான பிட்ச்சில் அனைவரும் திணறிய போது பிளாட்டான பிட்ச்சில் பேட்டிங் செய்ததை போல் கேரள ரசிகர்களுக்கு விருந்து படைத்த சூர்யகுமார் யாதவ் அறிவிக்கப்படாத ஆட்டநாயகனாக செயல்பட்டார்.

- Advertisement -

மாஸ் உலகசாதனை:
உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் கடினமாக உழைத்து 30 வயதில் இந்தியாவுக்காக அறிமுகமான அவர் கடந்த ஒன்றரை வருடங்களில் இதேபோல சூழ்நிலை எதுவாக இருந்தாலும் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே நாலாபுறமும் சுழன்றடிக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்தி லேட்டஸ்ட் மேட்ச் வின்னராக வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து வருகிறார். அதனால் “இந்தியாவின் ஏபிடி” என்று ரசிகர்கள் கொண்டாடும் அவர் அறிமுகமானது முதல் இதர இந்திய வீரர்களைக் காட்டிலும் அதிகபட்சமாக 6 ஆட்ட நாயகன் விருதுகளை வென்று உலகின் நம்பர் 2 பேட்ஸ்மேனாக மளமளவென முன்னேறியுள்ளார்.

Suryakumar Yadav 1

1. மேலும் நேற்றைய போட்டியில் எடுத்த 50 ரன்களையும் சேர்த்து இந்த வருடம் 732 ரன்களை எடுத்துள்ள அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சிகர் தவானின் சாதனை உடைத்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. சூரியகுமர் யாதவ் : 732* (2022)
2. ஷிகர் தவான் : 689 (2018)
3. விராட் கோலி : 641 (2016)
4. ரோஹித் சர்மா : 590 (2018)

- Advertisement -

2. மேலும் 9 மாதங்களிலேயே இந்த உச்சத்தை எட்டி உலக அளவில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ள அவர் எஞ்சிய 3 மாதங்களும் இதே போல் விளையாடினால் உலகசாதனையும் படைக்க வாய்ப்புள்ளது. அந்தப் பட்டியல்:
1. முகமத் ரிஸ்வான் : 1326 (2021)
2. பாபர் அசாம் : 939 (2021)
3. பால் ஸ்டிர்லிங் : 748 (2019)
4. சூர்யகுமார் யாதவ் : 732* (2022)

இதையும் படிங்க : IND vs RSA : முதல் போட்டியில் நாங்கள் பெற்ற இந்த அசத்தலான வெற்றிக்கு இதுவே காரணம் – ரோஹித் மகிழ்ச்சி

3. அதைவிட அசால்டாக சிக்ஸர் பறக்க விடும் திறமை பெற்றுள்ள அவர் நேற்றைய போட்டியில் அடித்த 3 சிக்ஸர்களையும் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக சிக்சர்கள் அடித்த பேட்ஸ்மன் என்ற பாகிஸ்தானின் முஹம்மது ரிஸ்வான் சாதனையை உடைத்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. சூரியகுமார் யாதவ் : 45* (2022)
2. முகமத் ரிஸ்வான் : 42 (2021)
3. மார்ட்டின் கப்டில் : 41 (2021)

Advertisement