விராட் கோலி ஒரு பவர்ஹவுஸ்.. அவரை பாத்து தான் 2022இல் இதை கத்துக்கிட்டேன்.. சூர்யகுமார் வெளிப்படை

Suryakumar Yadav Virat Kohli
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வென்று வரலாறு படைத்தது. அந்தத் தொடருடன் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றனர். குறிப்பாக பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் விராட் கோலி 35 வயதிலேயே வருங்கால வீரர்களுக்கு வழிவிட்டு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்த உலகக் கோப்பையில் முதல் 7 போட்டிகளில் 75 ரன்கள் மட்டுமே எடுத்த அவர் இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை கொடுத்தார். ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மாபெரும் இறுதிப் போட்டியில் 76 ரன்கள் குவித்த அவர் இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். அதனால் இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற அவர் தன்னை சாம்பியன் வீரர் என்பதை நிரூபித்து விடை பெற்றார்.

- Advertisement -

சூரியகுமார் பாராட்டு:
இந்நிலையில் மிகவும் ஆக்ரோசமாக செயல்படக்கூடிய விராட் கோலி வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் களத்தில் பவர்ஹவுஸ் போல விளையாடுவார் என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். மேலும் வேகமாக ஓடக்கூடிய விராட் கோலியுடன் இணைந்து பேட்டிங் செய்ய வேண்டுமானால் நாமும் உயர்தர ஃபிட்னஸை கடைபிடிக்க வேண்டும் என்று 2022இல் முடிவெடுத்ததாகவும் சூரியகுமார் தெரிவித்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “தன்னுடைய செயல்பாடுகளைத் தாண்டி விராட் கோலி களத்தில் ஒரு பவர்ஹவுஸ். இந்த தொடரில் ஃபைனலுக்கு முந்தைய போட்டி வரை அவருக்கு சாதகமாக எதுவும் செல்லவில்லை. ஆனாலும் களத்தில் தன்னை எப்போதுமே முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட அவர் அணியுடன் இருந்து அனைத்தையும் செய்தார். அந்த வகையில் அவர் தன்னுடைய சொந்த வழியில் ஒரு தலைவர்”

- Advertisement -

“2022இல் நான் அறிமுகமாக விளையாடினேன். அப்போது உலகக் கோப்பை மற்றும் இருதரப்பு தொடர்களில் பெரும்பாலான சமயங்களில் நான் அவருடன் இணைந்து பேட்டிங் செய்தேன். அப்போது விராட் கோலியுடன் இணைந்து பேட்டிங் செய்ய வேண்டுமெனில் அவருடைய ஃபிட்னஸை நானும் பொருத்த வேண்டும் என்பதை உணர்ந்தேன்”

இதையும் படிங்க: கோஹினூர் வைரத்தை விட.. அவர் தான் இந்தியாவின் மதிப்பான பிளேயர்.. தினேஷ் கார்த்திக் பாராட்டு

“ஏனெனில் மிகவும் வேகமாக 2 ரன்கள் ஓடும் அவர் கிடைக்கும் இடைவெளியில் பவுண்டரி அடிக்கிறார். எனவே அவரைப் போல என்னையும் பயிற்சி செய்யுமாறு பயிற்சியாளர் சோஹம் தேசாயிடம் சொன்னேன். ஏனெனில் சில நேரங்களில் உடலளவிலும் மனதளவிலும் நான் தயாராக இல்லை என்பது போல் உணர்வேன். எனவே விராட் கோலி பயிற்சி எடுக்கும் 40 நிமிடங்களை பார்த்த பின்பே நான் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வேன்” என்று கூறினார்.

Advertisement