ரோஹித் சர்மாவின் மாபெரும் சாதனையை சமன் செய்ய காத்திருக்கும் சூரியகுமார் யாதவ் – விவரம் இதோ

SKY and Rohit
- Advertisement -

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் 2025-ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த ஆசிய கோப்பை தொடரானது செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் செப்டம்பர் 28-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக நடைபெற இருக்கிறது. அதற்கான அட்டவணையும் ஏற்கனவே வெளியாகி விட்டன.

ரோஹித்தின் சாதனையை சமன் செய்ய காத்திருக்கும் சூரியகுமார் யாதவ் :

இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான பதினைந்து பேர் கொண்ட இந்திய அணியானது கடந்த வாரம் பிசிசிஐ-யின் மூலம் அதிகாரவப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட வேளையில் இந்த இந்திய அணியானது செப்டம்பர் 4-ஆம் தேதி துபாய் நாட்டிற்கு புறப்பட உள்ளது. அதோடு துபாயில் உள்ள ஐசிசி கிரிக்கெட் அகாடமியில் சில நாட்கள் பயிற்சி எடுக்குவும் திட்டமிடப்பட்டுள்ளது.

- Advertisement -

அதன் பின்னர் இந்திய அணியானது தங்களது முதலாவது போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்த்து செப்டம்பர் 10-ஆம் தேதி துபாய் மைதானத்தில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் எதிர்வரும் இந்த ஆசிய கோப்பை தொடரில் விளையாட இருக்கும் இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மாவின் மாபெரும் சாதனை ஒன்றினை சமன் செய்ய காத்திருக்கிறார்.

அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் இந்திய அணியின் கேப்டனான சூர்யகுமார் யாதவ் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : இந்திய அணிக்காக இதுவரை 83 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 167 ஸ்ட்ரைக் ரேட் உடன் 2598 ரன்களை குவித்துள்ளார். அதில் நான்கு சதங்கள் அடங்கும்.

- Advertisement -

இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி 7 போட்டிகளில் விளையாட வாய்ப்புள்ள வேளையில் அதில் சூர்யகுமார் யாதவ் ஒரு சதம் அடித்தால் கூட ரோஹித் சர்மாவின் சாதனையை அவர் சமன் செய்ய வாய்ப்புள்ளது. சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சதங்களை அடித்த வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 5 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க : 2026 டி20 வேர்ல்டு கப்ல எந்த 2 பேர் துவக்க வீரர்களாக விளையாடனும்.. ரெய்னா தேர்வு செய்த 2 ஓப்பனர்ஸ் – யார் தெரியுமா?

அவர்களுக்கு அடுத்து சூரியகுமார் யாதவ் நான்கு சதங்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இந்நிலையில் இந்த தொடரில் அவர் மேலும் ஒரு சதத்தை அடிப்பதன் மூலம் அவர்கள் இருவரையும் சூரியகுமார் யாதவ் சமன் செய்வார். அதுமட்டும் இன்றி சர்வதேச டி20 போட்டிகளில் தற்போது வரை 2598 ரன்களை அடித்திருக்கும் அவர் மேலும் 402 ரன்களை இந்த தொடரில் அடிக்கும் பட்சத்தில் 150+ ஸ்ட்ரைக் ரேட்டுடன் 3000 ரன்களை அடித்த பேட்ஸ்மேனாகவும் சூரியகுமார் யாதவ் மாறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement