நிறைய விளையாடியிருந்தாலும் அந்த 2 இன்னிங்ஸ் தான் எனக்கு பிடிச்ச மறக்க முடியாத இன்னிங்ஸ் – மனம் திறக்கும் சூர்யகுமார்

Suryakumar-Yadav
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையை தொடர்ந்து நியூசிலாந்து மண்ணில் விளையாடி வரும் இந்தியா டி20 தொடரை வென்றாலும் ஒருநாள் தொடரை வெல்ல முடியவில்லை. இருப்பினும் மழைக்கு மத்தியில் டி20 தொடரில் நியூஸிலாந்தை அதன் சொந்த மண்ணில் 1 – 0 (3) என்ற கணக்கில் தோற்கடிக்க 2வது போட்டியில் சதமடித்து முக்கிய பங்காற்றிய சூரியகுமார் யாதவ் தொடர்நாயகன் விருதை வென்றார். இந்தியாவுக்காக விளையாடும் லட்சியத்தில் உள்ளூர் கிரிக்கெட்டில் கடினமாக உழைத்து தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் கடந்த ஒன்றரை வருடங்களில் பெரும்பாலான போட்டிகளில் அசத்தி வரும் அவர் டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியையும் மிஞ்சும் அளவுக்கு லேட்டஸ்ட் மேட்ச் வின்னராக அவதரித்து தர வரிசையில் மடமடவென நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்ற மாபெரும் உச்சத்தை எட்டியுள்ளார்.

Suryakumar-Yadav

- Advertisement -

அதை விட பெரும்பாலான போட்டிகளில் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் எதிரணி எப்படி பந்து வீசினாலும் களமிறிங்கிய முதல் பந்திலிருந்தே பவுலர்களை செட்டிலாக விடாமல் மைதானத்தின் நாலாபுறங்களிலும் பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக தெறிக்க விடும் அவரது பேட்டிங்கை பார்த்து அனைவரும் வியந்து வருகிறார்கள். குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்த துவங்கியுள்ள அவரது அற்புதமான பேட்டிங்கை பார்த்து வியந்த ரிக்கி பாண்டிங், ஏபி டீ வில்லியர்ஸ் போன்ற ஜாம்பவான்களும் ரசிகர்களும் அவரை இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி என்று பாராட்டி வருகிறார்கள்.

சிறந்த இன்னிங்ஸ்:

அந்த வகையில் தற்சமயத்தில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் இந்திய பேட்ஸ்மனாக கருதப்படும் அவருடைய ஒன்றரை வருட கேரியரில் இங்கிலாந்து மண்ணில் அடித்த சதமும் தற்போது நியூசிலாந்து மண்ணில் அடித்த சதமும் சிறந்த இன்னிங்ஸ்களாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் கடந்த 2021இல் இங்கிலாந்துக்கு எதிராக அகமதாபாத் மைதானத்தில் அறிமுகமாக களமிறங்கிய முதல் போட்டியிலேயே 57 (31) ரன்கள் குவித்து இந்தியாவை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருது வென்றதே தம்முடைய சிறந்த இன்னிங்ஸ் என்று சூரியகுமார் யாதவ் தேர்வு செய்துள்ளார்.

Sky

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “என்னுடைய அறிமுக போட்டியில் அடித்த அரை சதம் எனக்கு மிகவும் பிடித்த இன்னிங்ஸ் என்று நினைக்கிறேன். அந்த முதல் போட்டியிலேயே என்னால் இந்தியா வென்றது எனக்கு மிகவும் ஸ்பெஷலாகும்” என்று கூறினார். அந்த போட்டியில் களமிறங்கிய போது முதல் பந்திலேயே தற்சமயத்தில் உலகின் அதிரடி வேகப்பந்து வீச்சாளராக கருதப்படும் ஜோஃப்ரா ஆர்ச்சரை எதிர்கொண்ட சூரியகுமார் யாருமே எதிர்பாராத வகையில் தனது கேரியரின் முதல் பந்தையே அசால்டாக பின்புறத்தில் சிக்ஸராக பறக்க விட்டு ஒரு சூப்பர் ஸ்டார் அவதரிக்க போகிறார் என்பதை அப்போதே ரசிகர்களுக்கு சொல்லாமல் சொன்னார் என்றே கூறலாம்.

- Advertisement -

அத்துடன் இந்தியாவுக்காக விளையாட உதவிய மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2019 ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிரான குவாலிபயர் 1 நாக் அவுட் போட்டியில் 70* ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்தது தமக்கு பிடித்த மற்றொரு இன்னிங்ஸ் என்று சூரியகுமார் தெரிவித்தார். அப்போட்டியில் 132 ரன்களை துரத்தும் போது ஆரம்பத்திலேயே ரோகித் சர்மா அவுட்டான பின் இஷான் கிசனுடன் 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 70* ரன்கள் விளாசிய அவர் அந்த சீசனில் 424 ரன்கள் குவித்து மும்பை 5வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். இது பற்றி அவர் மனம் திறந்து பேசியது பின்வருமாறு.

“2019 ஐபிஎல் தொடரில் சென்னையில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதிய குவாலிஃபயர் 1 போட்டியில் விளையாடிய இன்னிங்ஸ் எனக்கு மிகவும் பிடிக்கும். அப்போட்டியில் 130 – 135 ரன்களாக இருந்தாலும் சேசிங் செய்வது கடும் சவாலாக இருந்தது. அந்த சமயத்தில் நான் கடைசி வரை அவுட்டாகாமல் 70 ரன்கள் அடித்து எங்களது அணி வென்றது. எனவே அந்த இன்னிங்சும் எனக்கு மிகவும் ஸ்பெஷலாகும். அந்த 2 இன்னிங்ஸ்களையும் நான் திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டே இருப்பேன்” என்று கூறினார்.

Advertisement