- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பாண்டியாவால் தான் அந்த ஆப்சன் கிடைக்குது.. முதல் டி20யில் இங்கிலாந்தை வீழ்த்தியது பற்றி சூரியகுமார் பேட்டி

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் 1 – 0* (5) என்ற கணக்கில் இந்தியா இந்த தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஜோஸ் பட்லர் 68 ரன்கள் எடுத்தார்.

இந்தியாவுக்கு அதிகபட்சமாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளை எடுத்தார். பின்னர் சேசிங் செய்த இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா 79, சஞ்சு சாம்சன் 26 ரன்கள் எடுத்து 12.5 ஓவரிலேயே வெற்றி பெற வைத்தார்கள். இந்த வெற்றிக்கு 3 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

புதிய இந்திய அணி:

இந்நிலையில் ஹாட்ரிக் பாண்டியா இருப்பது இந்திய அணியில் வெறும் வேகப்பந்து வீச்சாளர், எக்ஸ்ட்ரா ஸ்பின்னருடன் விளையாட உதவுவதாக கேப்டன் சூரியகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். இப்போட்டியில் இந்திய அணியின் வெற்றி பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “டாஸ் வென்றதும் நாங்கள் எனர்ஜியுடன் போட்டியை துவங்கியது வெற்றிக்கான அடித்தளத்தை கொடுத்தது. நாங்கள் அனைத்தையும் அங்கிருந்து பெற்றோம்”

“எங்களுடைய அனைத்து பவுலர்களும் தங்களுடைய சொந்த திட்டங்களை வைத்து செயல்படுத்துகிறார்கள். களத்தில் நல்ல எனர்ஜியுடன் விளையாடிய நாங்கள் பேட்டிங் செய்த விதம் சிறப்பாக இருந்தது. 3 ஸ்பின்னர்களை தேர்ந்தெடுத்து எங்களுடைய பலத்திற்கு ஆதரவு தருகிறோம். தென்னாப்பிரிக்காவிலும் நாங்கள் இதையே செய்தோம். ஹர்திக் பாண்டியா புதிய பந்தில் பொறுப்பை எடுத்துக் கொள்கிறார். அதனால் மூன்று ஸ்பின்னர்களுடன் விளையாடும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கிறது”

- Advertisement -

எனர்ஜி தான் வேணும்:

“அந்த மூவருமே நன்றாக செயல்பட்டார்கள். மிகவும் எளிமையாக செயல்படும் வருண் சக்கரவர்த்தி தெளிவுடன் நன்றாக போட்டிக்கு தயாராகி வருகிறார். அதுவே மற்றவர்களிடமிருந்து அவரை வித்தியாசப்படுத்துகிறது. அர்ஷ்தீப் நிறைய பொறுப்பை எடுத்துக்கொண்டு அனுபவத்தை கற்றுக் கொண்டு வருகிறார். நாம் மட்டுமே ஒரே பவுலராக இருக்கிறோம் என்பதை தெரிந்து கொண்டு அவர் பொறுப்புடன் புதிய பந்தில் பவுலிங் செய்கிறார்”

இதையும் படிங்க: 10க்கு 7 தான்.. ஆட்டநாயகன் விருது வென்றாலும் இன்னும் முன்னேறனும்.. இங்கிலாந்தை வீழ்த்திய திட்டம் பற்றி வருண்

“கௌதம் கம்பீர் பாய் எங்களுக்கு நிறைய சுதந்திரத்தை கொடுக்கிறார். நாங்கள் 2024 டி20 உலகக் கோப்பையை விட நாங்கள் கொஞ்சம் வித்தியாசமாக விளையாட விரும்புகிறோம். எங்களுடைய திட்டப்படி நாங்கள் ஒரே வழியில் பேட்டிங் செய்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஃபீல்டிங் செய்வதில் நாங்கள் பயிற்சியாளர்களுடன் கடினமாக வேலை செய்கிறோம். எங்களிடம் நல்ல எனர்ஜி வேண்டும் என்பது மட்டுமே தேவையான விஷயமாக இருக்கிறது. குறிப்பாக பாதி வாய்ப்புகளை பிடிப்பது வெற்றியில் வித்தியாசத்தை ஏற்படுத்தும்” என்று கூறினார்.

- Advertisement -