- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தியா ஜெய்க்கும் வரை இந்த தோல்வி பிரச்சனையில்ல.. 5வது டி20யில் ரிங்குவை சேர்த்த கேப்டன் சூரியகுமார் பேட்டி

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கும் அத்தொடரின் கடைசிப் போட்டியில் நவம்பர் எட்டாம் தேதி துவங்கியது. அப்போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள புகழ்பெற்ற காபா கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.45 மணிக்குத் துவங்கியது.

அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. கடைசியாக விளையாடிய பெரும்பாலான போட்டிகளில் இந்தியா தொடர்ச்சியாக டாஸ் வீசுவதில் தோல்விகளைச் சந்தித்தது. இருப்பினும் டாஸ் அதிர்ஷ்டம் இல்லாமலேயே நிறையப் போட்டிகளில் இந்திய அணி தங்களுடைய திறமையால் எதிரணிகளுக்கு சவால் கொடுத்து வெற்றி பெற்று வருகின்றது.

- Advertisement -

டாஸ் பிரச்சனையில்ல:

குறிப்பாக கடந்தப் போட்டியில் டாஸ் தோற்ற இந்தியா 168 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அடுத்ததாக பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா 119 ரன்களுக்கு ஆஸ்திரேலியாவை சுருட்டி அபார வெற்றி பெற்றது. அதே போல இந்தியா வெற்றி பெறும் வரை டாஸ் தங்களுக்கு பிரச்சனையில்லை என்று கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

மேலும் 2025 ஆசியக் கோப்பை ஃபைனலுக்கு பின் போட்டிகளில் திலக் வர்மா பெரிய ரன்கள் குவிக்கவில்லை. எனவே அவருக்கு தற்காலிகமாக ஓய்வளித்துள்ள இந்திய அணி ரிங்கு சிங்கை சேர்த்துள்ளதாகவும் சூரியகுமார் தெரிவித்தார். மற்ற படி கடந்தப் போட்டியில் விளையாடிய அனைத்து வீரர்களும் காபா போட்டியில் விளையாடுவதாக சூரியகுமார் அறிவித்தார்.

- Advertisement -

ரிங்குவுக்கு வாய்ப்பு:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் போட்டியை வெற்றி பெறும் வரை டாஸ் வீசுவதில் தோல்வியைச் சந்தித்தால் அது பரவாயில்லை. நாங்கள் களத்திற்குச் சென்று எங்களை வெளிப்படுத்த விரும்புகிறோம். அணியின் இலக்கு என்ன என்பதைப் புரிந்து கொள்வது எப்போதும் நல்லதாக இருக்கும். கடந்தப் போட்டியின் பிட்ச் 200 ரன்கள் அடிப்பதற்கு உகந்தது கிடையாது என்று எங்கள் அனைத்து பேட்ஸ்மேன்களும் புரிந்து கொண்டார்கள்”

இதையும் படிங்க: சர்வதேச டி20 போட்டிகளில் குல்தீப் யாதவின் ஆல்டைம் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் – வருண் சக்கரவர்த்தி

“கடந்தப் போட்டியில் நாங்கள் அனைத்து கட்டங்களையும் நிரப்பினோம். அதை இப்போட்டியிலும் தொடர விரும்புகிறோம். இது போன்ற இருதரப்பு தொடர்களை வெல்வது எப்போதும் நன்றாக இருக்கும். அதே சமயம் உங்களுடைய அணியின் வெற்றிக்கு எந்த காம்பினேஷன் தேவை என்பது முக்கியம். டி20 கிரிக்கெட்டில் ஓப்பனர்களைத் தவிர்த்து மற்ற அனைவரும் வெவ்வேறு பேட்டிங் இடங்களில் விளையாட வேண்டும். எங்களுடைய அணியில் ஒரு மாற்றம். திலக் ஓய்வெடுக்கிறார், ரிங்கு வருகிறார்” என்று கூறினார்.

- Advertisement -