- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சுப்மன் கில் ஒன்னும் சாம்சன் இடத்தைப் பிடிக்க வரல.. சாம்சன் 2க்கும் ஒத்துப்போறாரு.. சூரியகுமார் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணி 25 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் தோல்வியைப் பரிசளித்த தென்னாபிரிக்காவுக்கு ஒருநாள் தொடரை வென்று பதிலடி கொடுத்தது. அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா விளையாடும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் டிசம்பர் ஒன்பதாம் தேதி துவங்கியது. 2026 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் நோக்கத்தில் நடைபெறும் அத்தொடரில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்த இந்திய அணி தயாராக உள்ளது.

அத்தொடரில் துணைக் கேப்டன் சுப்மன் கில் காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் விளையாட உள்ளார். அதனால் ஓப்பனிங்கில் அவர் விளையாடுவார் எதிர்பார்க்கப்படுவதால் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. முன்னதாக டி20 கிரிக்கெட்டில் தடுமாற்றமாக விளையாடிய சுப்மன் கில் 2024க்குப்பின் கழற்றி விடப்பட்டார்.

- Advertisement -

சாம்சன் இடத்துக்கு கில் வரல:

அவருக்கு பதிலாக நீண்ட காலம் மிடில் ஆர்டரில் தடுமாறிக் கொண்டிருந்த சாம்சனுக்கு ஓப்பனிங்கில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அந்த வாய்ப்பில் 3 சதங்கள் அடித்த சாம்சன் சிறப்பாக விளையாடி தமக்கான இடத்தை உறுதி செய்தார். ஆனால் திடீரென சுப்மன் கில்லை புதிய கேப்டனாக வளர்க்க நினைக்கும் தேர்வுக்குழு அவரை கழற்றி விட்டு ஓப்பனிங்கில் விளையாட வைத்து வருகிறது.

அதே சமயம் 3 சதங்கள் அடித்த சாம்சனின் ஆட்டத்தை மதித்த கௌதம் கம்பீர் அவருக்கு மிடில் ஆடரில் வாய்ப்பளித்து வருகிறார். அந்த வாய்ப்பில் சாம்சன் கணிசமாக அசத்தி வருகிறார் என்றே சொல்லலாம். இந்நிலையில் சுப்மன் கில் ஒன்றும் சாம்சன் பிடிப்பதற்காக வரவில்லை என்று கேப்டன் சூர்யகுமார் தெரிவித்துள்ளார். சம்சானுக்கு முன் ஓப்பனிங்கில் விளையாடிய கில்லுக்கு மீண்டும் அவ்வாய்ப்பு கொடுக்கப்படுவதாகவும் சூரியகுமார் தெளிவுபடுத்தியுள்ளார்.

- Advertisement -

சூரியகுமார் விளக்கம்:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சஞ்சு வட்டத்திற்குள் வந்த போது டாப் ஆர்டரில் விளையாடினார். ஆனால் இப்போது விஷயம் என்னவெனில் ஓப்பனர்களை தவிர்த்து மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் நெகிழ்வுத் தன்மையுடன் இருக்க வேண்டும். சாம்சன் ஓப்பனிங்கில் அசத்தினார். ஆனால் அதற்கு முன்பாகவே இலங்கை தொடரில் ஓப்பனிங்கில் விளையாடிய கில் அந்த வாய்ப்புக்கு தகுதியானவர்”

இதையும் படிங்க: இன்னும் 3 வருஷம் விளையாடுனா போதும்.. நிச்சயமா விராட் கோலியால் அதை சாதிக்க முடியும் – கவாஸ்கர் கருத்து

“சாம்சனுக்கும் நாங்கள் வாய்ப்பு கொடுத்தோம். ஓப்பனிங், மிடில் ஆர்டர் ஆகிய 2 இடங்களிலும் விளையாட அவர் தயாராக இருக்கிறார். உண்மையில் ஒருவர் 3 – 6 ஆகிய இடங்களில் எங்கே வேண்டுமானாலும் விளையாடத் தயாராக இருப்பது நல்லது. அதையே எங்கள் அனைத்து பேட்ஸ்மேன்களிடமும் நான் தெரிவித்துள்ளேன். சாம்சன், ஜிதேஷ் சர்மா ஆகிய இருவருமே எங்கள் திட்டத்தில் உள்ளார்கள். அப்படிப்பட்ட வீரர்கள் எங்கள் அணியில் இருப்பது நல்ல தலைவலி” என்று கூறினார்.

- Advertisement -