- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அதோடு சேர்த்து தோல்விக்கு நாங்க 2 பேர் தான் காரணம்.. கத்துக்கிட்டு கம்பேக் தருவோம்.. சூரியகுமார் பேட்டி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இருப்பினும் இரண்டாவது போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற தென்னாப்பிரிக்கா பதிலடி கொடுத்து 1 – 1* (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது. நேற்று முல்லான்பூரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா 213/4 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக குவிண்டன் டீ காக் 90 ரன்கள் இந்தியாவிற்கு அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்து விளையாடிய இந்தியா தடுமாற்றமாக பேட்டிங் செய்து 19.1 ஓவரில் 162 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 62 ரன்கள் எடுத்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக பார்ட்மேன் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

தோல்விக்கு காரணம்:

இந்நிலையில் இப்போட்டியில் பனி நிறைந்த சூழ்நிலைகளில் தங்களது பவுலர்கள் தென்னாப்பிரிக்காவை போல சரியான லைன், லென்த்தில் பந்து வீசவில்லை என்று கேப்டன் சூரியகுமார் தெரிவித்துள்ளார். அதே போல பேட்டிங்கில் தாமும் சுப்மன் கில்லும் சொதப்பியது தோல்விக்கு காரணமானதாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இது பற்றி சூரியகுமார் பேசியது பின்வருமாறு.

“நாங்கள் முதலில் பேட்டிங் செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனெனில் முதலில் பந்து வீசிய நாங்கள் எதையும் அதிகமாக செய்யவில்லை. நாங்கள் கம்பேக் கொடுத்திருக்க வேண்டும். ஏனெனில் முதலில் பந்து வீசிய நாங்கள் இந்த பிட்ச்சில் லைன், லென்த் எவ்வளவு முக்கியம் என்பதைப் பின்பு தான் உணர்ந்தோம். எனவே இது கற்றல் செயல்முறையாகும். நாங்கள் கற்றுக்கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும்”

- Advertisement -

கம்பேக் தருவோம்:

“கொஞ்சம் பனியும் இருந்தது. அதனால் திட்டம் வேலை செய்யவில்லை என்றால் நாங்கள் 2வது திட்டத்தை வைத்திருக்க வேண்டும். ஆனால் அது எங்கள் வழியில் செல்லவில்லை. பரவாயில்லை. அவர்கள் எப்படி பந்து வீசினார்கள் என்பதைப் பார்த்து நாங்கள் கற்றுக் கொண்டோம். அதை இரண்டாவது போட்டியில் செயல்படுத்த முயற்சிப்போம். நானும் கில்லும் நல்லத் துவக்கத்தைக் கொடுக்கவில்லை. ஏனெனில் அனைத்து நேரமும் நீங்கள் அபிஷேக்கை சார்ந்திருக்க முடியாது”

இதையும் படிங்க: 51 ரன்ஸ்.. தெ.ஆ பதிலடி வெற்றி.. அதிர்ஷ்டத்தை தவற விட்ட இந்தியா தோற்க 3 காரணம் இதோ

“கில் முதல் பந்திலேயே அவுட்டானதால் நான் பொறுப்புடன் இன்னும் ஆழமாக விளையாடியிருக்க வேண்டும். அதை செய்யாத நாங்கள் கற்றுக்கொண்டு அடுத்தப் போட்டியில் வருவோம். கடந்தப் போட்டியில் அக்சர் பட்டேல் நன்றாக விளையாடியதால் இன்று அவரை 3வது இடத்தில் விளையாட வைக்கலாம் என்று நினைத்தோம். துரதிஷ்டவசமாக அதுவும் வேலை செய்யவில்லை. அடுத்தப் போட்டியில் எங்களுக்கு என்ன நடக்கிறது என்று நாங்கள் பார்ப்போம்” எனக் கூறினார்.

- Advertisement -