கம்பீர் இல்லாமையே தெ.ஆ மாதிரி இந்தியாவால் ஜெய்க்க முடியும்.. பாண்டியாவின் நட்பு பற்றி.. சூரியகுமார் பேட்டி

Suryakumar Yadav 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தங்களது சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. ஜனவரி 22ஆம் தேதி கொல்கத்தாவில் துவங்கும் அந்தத் தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி களமிறங்க உள்ளது. சமீபத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்ததால் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் இருக்கிறார்கள்.

இருப்பினும் சூரியகுமார் தலைமையில் இலங்கை, வங்கதேசம், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டி20 தொடர்களில் வெற்றி பெற்றது. எனவே அந்த உத்வேகத்துடன் சொந்த மண்ணில் வலுவான இங்கிலாந்து அணியை இத்தொடரில் வீழ்த்த இந்தியா தயாராக உள்ளது. இந்நிலையில் கடந்த தென்னாப்பிரிக்க டி20 தொடரை போல கௌதம் கம்பீர் இல்லாமலேயே வெற்றி பெற முடியும் என்று சூரியகுமார் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கம்பீர் இல்லாமலேயே:

மேலும் துணை கேப்டன்ஷிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டாலும் தம்முடைய நண்பரான ஹர்திக் பாண்டியா இப்போதும் தலைமைப் பொறுப்பில் முக்கிய முடிவுகளை எடுப்பதில் பங்கு வகிப்பதாக சூரியகுமார் கூறியுள்ளார். புதிய துணை கேப்டன் அக்சர் பட்டேல் பற்றியும் அவர் பேசியது பின்வருமாறு. “ஹர்திக் பாண்டியாவுடன் நட்பு நன்றாகவே இருக்கிறது. நாங்கள் நீண்ட காலமாக ஒன்றாக விளையாடி வருகிறோம்”

“2018 ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு சென்றது முதல் இப்போதும் நாங்கள் ஒரே மாதிரியாக இருக்கிறோம். கேப்டன்ஷிப் என்பது எனக்கு எக்ஸ்ட்ராவாக கொடுக்கப்பட்ட பொறுப்பு மட்டுமே. ஐபிஎல் தொடரில் விளையாடும் போது கொஞ்சம் ரிலாக்ஸாக எடுக்க முடியும். மற்றபடி நண்பர்களாக களத்தில் இருக்கும் எங்களுக்கு இந்திய அணியை எப்படி முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும் என்பது தெரியும்”

- Advertisement -

நண்பன் பாண்டியா:

“அக்சர் படேலுக்கு எக்ஸ்ட்ரா பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பையில் அவர் என்ன செய்தார் என்பதை நாம் பார்த்தோம். அவரும் இந்திய அணியில் நீண்ட காலமாக இருந்து வருகிறார். ஹர்திக் பாண்டியாவும் லீடர்ஷிப் குரூப்பில் இருக்கிறார். எனவே களத்தில் எங்களிடம் நிறைய கேப்டன்கள் இருக்கிறார்கள். கௌதம் கம்பீர் தலைமையில் நான் 4 வருடங்கள் ஐபிஎல் தொடரில் விளையாடியதால் அவர் எப்படி வேலை செய்வார் என்பது தெரியும்”

இதையும் படிங்க: என்னோட தவறை ஒத்துக்குறேன்.. சாம்பியன்ஸ் ட்ராபி இந்திய அணியை பார்த்து எனக்கு வலிக்கல.. சூரியகுமார் பேட்டி

“அவரிடம் பேசாமலேயே என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். கடந்த தென்னாப்பிரிக்க டி20 தொடரில் அவர் எங்களுடன் இல்லை. டெஸ்ட் அணியில் இருந்தார். அப்போதும் நாங்கள் அணியை சரியான வழியில் வழி நடத்தினோம். வீரர்களுக்கு சுதந்திரத்தை கொடுக்கும் அவர் விஷயங்களை எளிமையாக கடைப்பிடிக்கிறார். வீரர்கள் தலையில் என்ன செல்கிறது என்பதும் அவருக்கு தெரியும். மிகவும் எளிமையாக விஷயங்களை கடைபிடிக்கும் அவர் நல்ல சூழ்நிலையை தொடர உதவுகிறார்” என்று கூறினார்.

Advertisement