
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியானது திருவனந்தபுரத்தில் ஜனவரி 31-ஆம் தேதியான நாளை நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக இந்திய அணி வீரர்கள் அனைவரும் கௌகாத்தி நகரில் இருந்து விமானத்தின் மூலம் திருவனந்தபுரம் வந்தடைந்தனர். அப்படி வந்த இந்திய அணிக்கு பலமான வரவேற்பு அங்கு அளிக்கப்பட்டது.
ஏற்கனவே இந்த தொடரில் நடைபெற்று முடிந்த நான்கு போட்டிகளின் முடிவில் மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் இந்திய தொடரை கைப்பற்றி விட்டது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடரின் கடைசி போட்டியானது சஞ்சு சாம்சனின் சொந்த ஊரான திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. தனது சொந்த மாநிலமான கேரளாவில் சஞ்சு சாம்சன் வந்து தரையிறங்கியதும் விமான நிலையத்திலிருந்து வெளியில் வரும் வரை சஞ்சு சாம்சனை கிண்டல் செய்யும் விதமாக கேப்டன் சூரியகுமார் யாதவ் சில சுவாரசியமான விடயங்களை ஏர்போர்ட்டில் செய்திருந்தார்.
அது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இந்திய அணிக்காக சஞ்சு சாம்சன் 50-க்கும் மேற்பட்ட டி20 போட்டிகளை விளையாடியிருந்தாலும் இதுவரை அவர் சொந்த மண்ணில் ஒரு போட்டியில் கூட விளையாடியதில்லை. இந்நிலையில் நாளைய போட்டியில் முதல் முறையாக சொந்த மண்ணில் விளையாட வரும் அவரை ரசிகர்கள் ஆரவாரமாக வரவேற்றனர்.
இதையும் படிங்க : இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து கம்பீர் நீக்கப்படுகிறாரா? – பி.சி.சி.ஐ செயலாளர் விளக்கம்
இந்நிலையில் விமான நிலையத்தில் வெளியே வந்த சஞ்சு சாம்சனை கேப்டன் சூரியகுமார் யாதவ் : யாரும் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்.. சேட்டா வரார் வழிய விடுங்க.. வழிய விடுங்க என விமான நிலையத்தில் தரை இறங்கியது முதல் வெளியில் வரும் வரை அவரை வழி நெடுகிலும் கலாய்க்கப்படியே சூர்யகுமார் யாதவ் கூப்பிட்டு வந்தார். அந்த விடயம் தற்போது ரசிகர்கள் மத்தியிலும் கவனத்தினை ஈர்த்துள்ளது.