சூர்யகுமாரின் இந்திய அணி கம்பேக் ஆசையில் விழுந்த மண்.. துலீப் கோப்பையில் விலகல்.. வெளியான தகவல்

Suryakumar Yadav
- Advertisement -

மும்பையை சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் சூரியகுமார் யாதவ் சமீபத்தில் இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் ஓய்வு பெற்ற ரோஹித் சர்மாவுக்கு பின் ஹர்திக் பாண்டியா புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சுமாரான ஃபிட்னஸ் காரணமாக புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அவரை கழற்றி விட்டு சூரியகுமாரை தேர்ந்தெடுத்தார்.

அதே சமயம் சூரியகுமார் யாதவ் ஒருநாள் அணியில் கழற்றி விடப்படுவதாக தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் வெளிப்படையாகவே தெரிவித்து விட்டார். ஏனெனில் கொஞ்சம் நிதானமாக விளையாட ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் இதுவரை சிறப்பாக செயல்படவில்லை. குறிப்பாக 2023 உலகக்கோப்பை ஃபைனலில் சுமாராக விளையாடிய அவர் இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்ததை ரசிகர்களால் மறக்க முடியாது.

- Advertisement -

சூரியகுமாரின் ஆசை:

அதனால் சூரியகுமாரை டி20 ஸ்பெசலிஸ்ட் பேட்ஸ்மேனாக மட்டுமே பார்ப்பதாக அஜித் அகர்கர் கூறியிருந்தார். அந்த சூழ்நிலையில் இந்தியாவுக்காக 3 விதமான கிரிக்கெட்டிலும் விளையாட விரும்புவதாக சமீபத்தில் சூரியகுமார் கூறியிருந்தார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகப் போட்டிக்குப் பின் காயமடைந்ததால் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

எனவே டெஸ்ட் அணியில் மீண்டும் கம்பேக் கொடுக்க விரும்புவதாக தெரிவித்த சூரியகுமார் அதற்காக தமிழ்நாட்டில் நடைபெறும் புஜ்ஜி பாபு தொடரில் விளையாட உள்ளதாகவும் கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து கோயம்புத்தூரில் நடைபெற்ற தமிழ்நாடு வாரிய லெவன் அணிக்கு எதிரான புஜ்ஜி பாபு போட்டியில் சூரியகுமார் மும்பை அணிக்காக களமிறங்கினார். ஆனால் அப்போட்டியில் துரதஷ்டவசமாக கையில் காயமடைந்த அவர் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்யவில்லை.

- Advertisement -

விழுந்த மண்:

இந்நிலையில் காயமடைந்த சூரியகுமாரை பெங்களூருவில் உள்ள என்சிஏவில் ஓய்வெடுக்குமாறு மும்பை வாரியம் அறிவுறுத்தியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அதே காரணத்தால் செப்டம்பர் 5ஆம் தேதி துவங்கும் 2024 துலீப் கோப்பையின் முதல் சுற்றில் சூரியகுமார் விளையாட மாட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மறுபுறம் துலீப் கோப்பையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்குத் தான் அடுத்ததாக நடைபெறும் வங்கதேச டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்காக விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்க உள்ளது.

இதையும் படிங்க: ஐபிஎல் மாதிரி எனக்கு இந்திய அணியின் பயிற்சியாளர் வேலை வேண்டாம்.. இதான் காரணம்.. சேவாக் விளக்கம்

இப்படிப்பட்ட சூழ்நிலையில் சூரியகுமார் முதல் ரவுண்டிலேயே காயத்தால் விலக உள்ளார். இது இந்திய டெஸ்ட் அணியில் கம்பேக் கொடுக்க வேண்டும் என்ற அவருடைய ஆசையில் மண்ணை போட்டுள்ளது என்றே சொல்லலாம். மேலும் அவர் காயத்தால் விலகுவது துலீப் கோப்பையில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சி அணிக்கு பின்னடைவாகவும் அமைய உள்ளது.

Advertisement