உலகிலேயே அவர் தான் டி20 சூப்பர் ஸ்டார் – இந்திய நட்சத்திர வீரரை பாராட்டும் பிரட் லீ

Lee
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா லீக் சுற்றில் அசத்தினாலும் நாக் அவுட் சுற்றில் படுதோல்வியை சந்தித்து ஏமாற்றத்துடன் வெளியேறியது. அதில் தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக அமைந்த கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்களுக்கு பதில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து புதிய டி20 அணியை உருவாக்கும் வேலைகள் துவங்கியுள்ளது. அதே சமயம் இந்த உலகக் கோப்பையில் பரம எதிரியிடம் பாகிஸ்தானை காலத்திற்கு மறக்க முடியாத வரலாற்று இன்னிங்ஸ் விளையாடிய விராட் கோலி முழு ஃபார்முக்கு திரும்பியதும், சூரியகுமார் யாதவ் எனும் சூப்பர் ஸ்டார் கிடைத்ததும் ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது.

Suryakumar-Yadav

- Advertisement -

அதில் விராட் கோலியே தடுமாறிய சவாலான பெர்த் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அட்டகாசமாக விளையாடிய இன்னிங்ஸ் போல பெரும்பாலான போட்டிகளில் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே சூழ்நிலை எதுவாக இருந்தாலும் எதிரணி எப்படி பந்து வீசினாலும் அதிரடியாக விளையாடும் சூர்யகுமார் மைதானத்தின் நாலாபுறங்களிலும் சுழன்றுடித்து அனைவரையும் வியக்க வைத்து வருகிறார். அதனால் இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்ற பெயரெடுத்துள்ள அவர் தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் கடந்த ஒன்றரை வருடங்களில் விராட் கோலி உள்ளிட்ட இதர வீரர்களை மிஞ்சி டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் லேட்டஸ்ட் மேட்ச் வின்னராக அவதரித்து குறுகிய காலத்திலேயே உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக ஜொலித்து வருகிறார்.

உலககோப்பை வெல்வார்:

அந்த வரிசையில் நியூசிலாந்தில் நடைபெற்ற டி20 தொடரிலும் மழைக்கு மத்தியில் 1 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா கோப்பையை வெல்ல ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்று முக்கிய பங்காற்றிய அவர் அடுத்ததாக வங்கதேச ஒருநாள் தொடரில் களமிறங்க உள்ளார். முன்னதாக நடைபெற்ற உலகக் கோப்பையில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான முக்கிய போட்டியில் ரன்கள் எடுக்க தவறிய சூரியகுமார் சில விமர்சனங்களையும் சந்தித்தார். ஆனால் அனைத்து போட்டிகளிலும் அடிக்க அவர் ஒன்றும் ரோபோட் கிடையாது என்ற நிலைமையில் இம்முறை தவறினாலும் வருங்காலங்களில் நிச்சயம் இந்தியாவுக்கு கோப்பையை வென்று கொடுப்பார் என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிரட் லீ பாராட்டியுள்ளார்.

Suryakumar Yadav

சூரியகுமார் டி20 கிரிக்கெட்டின் உலக சூப்பர்ஸ்டார் என்று பாராட்டும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “ஸ்கை அசத்தலாக விளையாடியும் இந்தியா டி20 உலக கோப்பையை வெல்லவில்லை. இருப்பினும் அவர் இவ்வுலகின் புதிய டி20 சூப்பர்ஸ்டார். கடந்த 12 – 15 மாதங்களில் அவர் உலக அரங்கில் என்ன ஒரு அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக புற்கள் இருப்பதால் பந்துகள் வழுக்கக்கடிய ஆஸ்திரேலிய மண்ணில் அவர் பயமின்றி விளையாடியது அபாரமாக இருந்தது. அவருடைய ஷாட் செலக்சன் சேஸ் கிரான்ட் மாஸ்டர் போல் உள்ளது. அசால்ட்டான ஷாட்களை எளிதாக அடித்து விட்டு தனது முகத்தில் அவர் காட்டும் சிரிப்பு அதை விட இனிமையானது”

- Advertisement -

“என்னை பொறுத்த வரை இந்த டி20 உலக கோப்பையில் அவர் ஹைலைட்டாக இருந்தார். அவர் தன்னுடைய அணுகு முறையில் தொடர்ந்து பேட்டிங் செய்தார். அதே அணுகு முறையில் அவர் பெரிய ரன்களை மட்டும் அடிக்கப் போவதில்லை விரைவில் ஒருநாள் இந்தியாவுக்கு உலக கோப்பையும் வென்று கொடுப்பார். அவர் விளையாடுவதை நான் எப்போதும் விரும்புகிறேன். அவருக்கு என்னுடைய ஆலோசனை என்னவெனில் எதுவுமே கிடையாது. ஏனெனில் நீங்கள் ஏற்கனவே சிறப்பாக விளையாடுவதால் எதையும் குழப்பாமல் அதே பாணியில் விளையாடுங்கள்”

Lee

“மேலும் அசாத்தியமான ஷாட்களை கூட எளிதாக அடிக்கும் அவருடைய அடிப்படை மற்றும் அதை செயல்படுத்தும் விதம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. நல்ல டெக்னிக் கொண்டுள்ள அவர் நிச்சயம் வருங்காலத்தில் இன்னும் அசத்தலான கிரிக்கெட் வீரராக வருவார். அவரை ராகுல் டிராவிட் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் அவரது வழியில் விளையாட விடுவார்கள் என்று நம்பலாம். வரும் காலங்களில் சூரியகுமார் இன்னும் எழுச்சி கண்டு இந்தியாவுக்கு இன்னும் மிகப்பெரிய உச்ச கட்டங்களை பரிசாக கொடுப்பார்” என்று மனதார பாராட்டினார்.

Advertisement