வீடியோ : என்னை அவுட்டாக்க பந்தே இல்ல – 8 வருடங்கள் கழித்து மும்பைக்காக பெரிய இலக்கை தொட்ட சூரியகுமார்

Suryakumar Yadav 103
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 12ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு மும்பையில் இருக்கும் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 57வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதின. அதில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் இப்போட்டியில் வென்று அதிகாரப்பூர்வமாக பிளே ஆஃப் தகுதி பெறும் முனைப்புடன் களமிறங்கியது. மறுபுறம் 4வது இடத்தில் இருக்கும் மும்பை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி வரை போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடியது. இருப்பினும் தாங்கள் பிளே ஆஃப் சுற்றுச் செல்ல எஞ்சிய 8 அணிகள் இப்போட்டியில் குஜராத் வெல்ல வேண்டும் என்ற நிலையை கொண்டுள்ளன.

அப்படி எஞ்சிய அனைத்து அணிகளின் ஆதரவுடன் டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய மும்பைக்கு கடந்த 3 போட்டியில் அடுத்தடுத்த டக் அவுட்டாகி மோசமான ஃபார்மில் தவிக்கும் கேப்டன் ரோஹித் சர்மா பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார்.

- Advertisement -

குறிப்பாக பழைய ஃபார்முக்கு திரும்பியது போல் 3 பவுண்டரி 2 சிக்சரை பறக்க விட்டு அதிரடி காட்டிய அவர் அரை சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரசித் கான் வீசிய 7வது ஓவரின் முதல் பந்திலேயே 29 (18) ரன்களில் ஏமாற்றத்துடன் அவுட்டாகி சென்றார். அவருடன் மறுபுறம் தனது பங்கிற்கு அதிரடி காட்டிய இஷான் கிஷான் 4 பவுண்டரி 1 சிக்சருடன் அதே ஓவரின் 5வது பந்தில் 32 (20) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய நேஹல் வதேரா 1 பவுண்டரி 1 சிக்சருடன் அச்சுறுத்திய போது 15 (7) ரன்களில் மீண்டும் ரசித் கான் கிளீன் போல்ட்டாக்கினார். ஆனாலும் மறுபுறம் களமிறங்கி வழக்கம் போல அதிரடி காட்டிய நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் குஜராத் பவுலர்களை தனது பாணியில் எதிர்கொண்டு விரைவாக ரன்களை சேர்த்தார். அவருடன் அடுத்ததாக வந்து அதிரடியாக செயல்பட்ட இளம் வீரர் விஷ்ணு வினோத் 4வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 2 பவுண்டரி 2 சிக்சருடன் 30 (20) ரன்கள் குவித்து தனது வேலையை செய்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அந்த நிலையில் வந்த டிம் டேவிட் 5 (3) ரன்களில் ரசித் கான் சுழலில் சிக்கிய நிலையில் மறுபுறம் தொடர்ந்து மிரட்டலாக பேட்டிங் செய்த சூரியகுமார் யாதவ் நேரம் செல்ல செல்ல அதிரடியாக செயல்பட்டு டெத் ஓவர்களில் குஜராத் பவுலர்களை பவுண்டரிகளும் சிக்சர்களுமாக பறக்க விட்டு சதத்தை நெருங்கினார். குறிப்பாக அல்சாரி ஜோசப் வீசிய கடைசி ஓவரில் 87 ரன்களில் இருந்த அவர் 2வது பந்தில் டபுள் எடுத்து 4வது பந்தில் சிக்ஸர் அடித்து 5வது பந்தில் டபுள் எடுத்து 97 ரன்களை எட்டினார்.

அதனால் கடைசி பந்தில் சதத்தை நெருங்குவதற்கு 3 ரன்களை தேவைப்பட்ட போது சாதாரணமாகவே சிக்சர் அடிக்கும் நான் இதை விடுவேனா என்ற வகையில் அசால்ட்டான சிக்சரை பறக்க விட்ட அவர் ஐபிஎல் தொடரில் தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்து 11 பவுண்டரி 6 சிக்ஸருடன் 104* (49) ரன்கள் குவித்து சூப்பர் பினிஷிங் கொடுத்தார். குறிப்பாக முதல் 32 பந்துகளில் 50 ரன்கள் மட்டுமே எடுத்த அவர் கடைசி 17 பந்துகளில் 53 ரன்கள் விளாசினார்.

இதையும் படிங்க:வீடியோ : என்னை அவுட்டாக்க பந்தே இல்ல – 8 வருடங்கள் கழித்து மும்பைக்காக பெரிய இலக்கை தொட்ட சூரியகுமார்

இதற்கு முன் சர்வதேச கிரிக்கெட்டிலேயே அசால்டாக 3 சதங்களை அடித்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக ஜொலித்து வரும் அவர் அந்த இடத்தை அடைவதற்கு முக்கிய காரணமாக இருந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக 2016இல் அறிமுகமானாலும் 8 வருடங்கள் கழித்து தற்போது தான் முதல் முறையாக சதமடித்துள்ளார். அதனால் 20 ஓவர்களில் மும்பை 218/5 ரன்கள் எடுத்த நிலையில் குஜராத் சார்பில் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை எடுத்த ரசித் கான் கூட அவுட்டாக்க முடியாத அளவுக்கு சூர்யகுமார் அமர்களப்படுத்தினார்.

Advertisement