- Advertisement -
ஆசிய கோப்பை

முடிஞ்சா ஜெய்ச்சு காட்டுங்க.. அதை விட்டுட்டு இந்தியாவையும் சூர்யாவையும் இழிவா பேசாதீங்க.. கோச் பதிலடி

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் மோதிய போட்டி செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற்றது. அந்தப் போட்டியில் பாகிஸ்தானை எளிதாக தோற்கடித்த இந்தியா சூப்பர் 4 சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. இருப்பினும் அப்போட்டியின் முடிவில் பாகிஸ்தான் அணிக்கு இந்திய அணியினர் கை கொடுக்காமல் வெளியேறியது சர்ச்சையை உண்டாக்கியது.

அதாவது சில மாதங்களுக்கு முன்பாக பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் நடத்திய தாக்குதலில் 26 இந்திய சுற்றுலாப் பயணிகள் இயற்கை எய்தினர். அதற்கு பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கைகள் எடுத்த இந்திய அரசாங்கம் தக்க பதிலடி கொடுத்திருந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு கை கொடுக்காமல் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியும் பதிலடி கொடுத்துள்ளது.

- Advertisement -

மரியாதையற்ற இந்தியர்கள்:

ஆனால் விளையாட்டில் அரசியலைக் கலந்து தங்களுக்கு கைக்கொடுக்காமல் வெளியேறிய இந்திய அணியை பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதன் உச்சமாக இந்திய கேப்டன் சூரியகுமாரை ஹிந்தியில் “சுவர்யகுமார்” அதாவது பன்றிகுமார் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் யூசுப் யுஹானா மட்டமாக விமர்சித்தார். அத்துடன் அம்பயர்களை கைக்குள் போட்டுக்கொண்டு வெல்வதற்காக இந்தியா வெட்கப்பட வேண்டும் என்றும் அவர் விமர்சித்திருந்தார்.

சாமா எனும் பாகிஸ்தான் தொலைக்காட்சியில் அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதைப் பார்த்த இந்திய ரசிகர்கள் களத்தில் வெற்றி பெற முடியாத நீங்கள் எங்களுடைய கேப்டனை இழிவாக பேசலாமா? என்று யுஹானாவை வெளுத்து வாங்கினர். இந்நிலையில் 2006இல் தம்மை வம்பிழுத்த ஷாஹித் அப்ரிடியை ஏன் நாய் போல குறைக்கிறீர்கள் என்று சொல்லி பதிலடி கொடுத்ததாக முன்னாள் இந்திய வீரர் இர்ஃபான் பதான் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

யுஹானா விளக்கம்:

அப்போது பதானை இந்திய மக்களும் ஊடகங்களும் பாராட்டியதாக யுகானா தெரிவித்துள்ளார். எனவே ஷாஹித் அப்ரிடியை கண்ணியம் மற்றும் மரியாதையின்றி பேசிய இந்தியர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே சூரியகுமாரை பன்றி என்று சொன்னதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி ட்விட்டரில் யுஹானா விளக்கியுள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: பலராலும் செய்ய முடியாத அதை சுப்மன் கில் ரொம்ப ஈஸியா செய்றாரு – மொயின் அலி, ஆதில் ரஷீத் பாராட்டு

“நாட்டுக்காக ஆர்வம் மற்றும் கருணையுடன் விளையாடும் எந்த விளையாட்டு வீரரையும் நான் அவமாரியாதை செய்யவில்லை. ஆனால் ஷாஹித் அப்ரிடி நாய் போல குறைக்கிறார் என்று சொன்ன இர்ஃபான் பதானை இந்திய ஊடகங்களும் மக்களும் ஏன் புகழ்ந்தார்கள்? கண்ணியம் மற்றும் மரியாதை பற்றி பேசும் இந்தியர்கள் அனைவரும் அதை நிறைவேற்றியிருக்க வேண்டும் அல்லவா?” என்று கூறினார்.

- Advertisement -