
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது இன்று ஜனவரி 21-ஆம் தேதி நாக்பூர் நகரில் சற்று முன்னர் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்சல் சான்ட்னர் முதலில் தங்களது அணி பந்து வீசும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது டாசில் வெற்றி பெற்ற சூரியகுமார் யாதவ் இந்திய அணியின் பிளேயிங் லெவனை அறிவித்ததோடு இந்த போட்டியில் விளையாட இருப்பது குறித்தும் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அவர் கூறியதாவது : இந்த போட்டியில் நாங்கள் முதலில் பந்துவீசவே விரும்பினோம்.
ஏனெனில் நாங்கள் இந்த மைதானத்தில் ஏற்கனவே பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இரவு 8:30 மணிக்கு மேல் டியூ அதிகமாக வருகிறது. அதனால் முதலில் பந்து வீசுவது பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனாலும் பரவாயில்லை முதலில் பேட்டிங் செய்தாலும் நிறைய ரன்களை நாங்கள் அடித்தால் நிச்சயம் சிறப்பான பந்துவீச்சின் மூலம் எங்களால் அவர்களை தடுத்து நிறுத்த முடியும்.
பேட்டிங்கிலும் எங்களது அணி வலுவான அணியாகவே உள்ளதால் நிச்சயம் பெரிய ரன் குவிப்பில் ஈடுபடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்ஷித் ராணா, ரவி பிஷ்னாய் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் விளையாடவில்லை என்று அறிவித்தார். அவர்களை தவிர்த்து இந்திய அணியின் பலமான பிளேயிங் லெவனும் டாசுக்கு பிறகு அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் ஏற்கனவே கணிக்கப்பட்டுள்ள பலமான அணியே இந்த போட்டிக்காக அறிவிக்கப்பட்டது. நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :
இதையும் படிங்க : விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய நியூசிலாந்து வீரர்.. பறிபோன கோலியின் முதலிடம் – விவரம் இதோ
1) அபிஷேக் சர்மா, 2) சஞ்சு சாம்சன், 3) இஷான் கிஷன், 4) சூரியகுமார் யாதவ், 5) ரிங்கு சிங், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ஷிவம் துபே, 8) அக்சர் படேல், 9) அர்ஷ்தீப் சிங், 10) வருண் சக்கரவர்த்தி, 11) ஜஸ்ப்ரீத் பும்ரா.