ஆரம்பத்துல கேட்ச் பிடிக்கணும்ன்னு நினைக்கல.. அந்த 5 – 7 நொடிகளை மறக்கவே மாட்டேன்.. சூரியகுமார் நெகிழ்ச்சி

- Advertisement -

ஐசிசி 2024 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்றது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற அத்தொடரில் ஆரம்பம் முதலே அசத்தலாக விளையாடிய இந்தியா இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்தது. அதனால் 17 வருடங்கள் கழித்து இந்தியா டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.

முன்னதாக பார்படாஸ் நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கடைசி ஓவரில் தெனாப்பிரிக்காவுக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது பாண்டியா வீசிய ஓவரின் முதல் பந்திலேயே டேவிட் மில்லர் நேராக சிக்சர் அடித்தார். அதை லாங் ஆஃப் திசையிலிருந்து ஓடி வந்த சூரியகுமார் யாதவ் கச்சிதமாக பிடித்தார். இருப்பினும் பாதியிலேயே பேலன்ஸை இழந்த அவர் பந்தை களத்திற்குள் தூக்கிப் போட்டு பவுண்டரிக்குள் சென்றார்.

- Advertisement -

5 – 7 நொடிகள்:
அடுத்த சில நொடிகளுக்குள் மீண்டும் களத்திற்குள் வந்த அவர் அற்புதமான கேட்ச் பிடித்து இந்தியாவுக்கு வெற்றியை பெற்று கொடுத்தார். அதனால் அவர் பிடித்தது கேட்ச் அல்ல உலகக்கோப்பை என்று பல ஜாம்பவான் வீரர்களும் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் ஆரம்பத்தில் அந்த நேரத்தில் சிக்ஸரை தடுத்து 2 – 3 ரன்கள் சேமிக்கலாம் என்றே நினைத்ததாக சூரியகுமார் தெரிவித்துள்ளார்.

ஆனால் தம்முடைய கையில் பந்து வந்ததால் எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்று சாதூரியமாக செயல்பட்டு கேட்ச் பிடித்ததாக அவர் கூறியுள்ளார். அந்த நொடிகளை வாழ்நாளில் மறக்க முடியாது என்று தெரிவிக்கும் சூரியகுமார் இது பற்றி ரெவ்ஸ்போர்ட்ஸ் யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “அங்கே ஓடுவதற்கு துவங்கும் போது நான் கேட்ச் பற்றி நினைக்கவில்லை. என்னுடைய கால்களின் மொத்த பலத்தையும் பயன்படுத்தி எப்படியாவது பவுண்டரியை நிறுத்த வேண்டும் என்று நினைத்தேன்”

- Advertisement -

“அதை தடுத்து குறைந்தது 2 – 3 ரன்களை அணிக்காக சேமிக்க விரும்பினேன். உண்மையில் ஆரம்பத்தில் நான் கேட்ச் பிடிப்பதை பற்றி நினைக்கவில்லை. இருப்பினும் பந்தை நெருங்கியதும் அது என்னுடைய கைகளுக்கு வருவதை உணர்ந்தேன். அப்படி கேட்ச் பிடிப்பதற்கு வாய்ப்புள்ளதாக நான் பந்தை மேலே தூக்கிப் போடுவோம் என்று நினைத்தேன். பவுண்டரிக்குள் சென்று விட்டு மீண்டும் வந்து என்னால் கேட்சை முழுமையாக முடியும் என்று உணர்ந்தேன்”

இதையும் படிங்க: 10% பேருக்கு மட்டுமே சான்ஸ் கிடைக்கும்.. ஏமாற்றமா இருந்தாலும் விராட், ரோஹித்துக்கு நன்றி சொல்றேன்.. ஷமி பேட்டி

“அந்த முடிவை எடுப்பதற்கு எனக்கு 5 – 7 நொடிகள் மட்டுமே இருந்தது. என்னுடைய வாழ்நாளில் அந்த 5 – 7 நொடிகளை மறக்கவே மாட்டேன். அந்த முடிவை நான் எடுத்தேன். அது இந்தியாவுக்கு வேலை செய்தது” என்று கூறினார். மொத்தத்தில் 1983இல் கபில் தேவ், 2007இல் ஸ்ரீசாந்த் போல 2024 உலகக் கோப்பை வெல்ல உதவிய சூரியகுமார் கேட்ச் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது.

Advertisement