எனது ஹீரோ தோனி, என் நண்பன் ரெய்னா உங்கள் இருவருக்கும் சல்யூட் – நடிகர் சூர்யா வெளியிட்ட வாழ்த்து

Surya

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி நேற்று முன்தினம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரைத் தொடர்ந்து அடுத்த அதிர்ச்சியாக சில நிமிடங்களிலேயே சின்ன தல ரெய்னாவும் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவர்கள் இருவரின் அடுத்தடுத்த ஓய்வு அறிவிப்பினால் ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Raina-1

இவர்கள் இருவரது ஓய்வு அறிவிப்பையும் பாராட்டி கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளம் மூலமாக தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் நட்சத்திர ஹீரோவான நடிகர் சூர்யா தோனி மற்றும் ரெய்னாவை பாராட்டியுள்ளார்.

தன் கரியரில் வெற்றியும், மகிழ்ச்சியான குடும்பம் மற்றும் சமூகத்திற்கு தன்னால் இயன்றதை கொடுப்பவரும் நான் ஒரு உண்மையான சாதனையாளன். அந்த வகையில் “என் ஹீரோ எம்எஸ் தோனி மற்றும் என் நண்பன் ரெய்னா” ஆகிய இருவரும் சாதனையாளர்கள் தான் உங்கள் இருவருக்குமே சிறப்புமிக்க இரண்டாவது இன்னிங்ஸ் காத்திருக்கிறது.

தேசத்தையே ஊக்கப்படுத்திய உங்களுக்கு சல்யூட். தேங்க்யூ தோனி ரெய்னா என்று சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் தோனி மற்றும் ரெய்னா ஆகியோர் இருக்கும் ஒரு புகைப்படத்தையும், அவர்கள் இருவரும் தங்களது மகள்களுடன் இருக்கும் ஒரு புகைப்படம் என இரண்டு புகைப்படங்களையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

சூர்யாவின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் தோனி மற்றும் ரெய்னாவுக்கு பல பிரபலங்களும் நாடு முழுவதிலும் மட்டுமின்றி உலகெங்கும் இருந்து வாழ்த்துகளை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.