- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஆசிய கோப்பை 2022 : வருங்காலத்தை யோசிச்சு செயல்படுங்க – டிகே தேர்வை விமர்சிக்கும் 2 முன்னாள் ஜாம்பவான் வீரர்கள்

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த இந்தியா பாகிஸ்தான் மோதிய ஆசிய கோப்பை போட்டி எதிர்பார்த்தது போலவே மிகவும் பரபரப்பாக நடைபெற்று முடிந்தது. ஆகஸ்ட் 28ஆம் தேதியான துபாயில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் இந்தியாவின் தரமான பந்துவீச்சில் பெரிய ரன்களை எடுக்க முடியாமல் 19.5 ஓவரில் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக முஹம்மது ரிஸ்வான் 43 (42) ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 147 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு முதல் ஓவரிலேயே கேஎல் ராகுல் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றினார்.

இருப்பினும் அடுத்ததாக 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவிலிருந்து மீட்டெடுத்த கேப்டன் ரோகித் சர்மா 12 ரன்களிலும் விராட் கோலி 35 ரன்களிலும் அவுட்டானார்கள். அந்த சமயத்தில் வந்த சூர்யகுமார் யாதவ் 18 ரன்களில் ஆட்டமிழந்து பின்னடைவை ஏற்படுத்தினாலும் 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ரவீந்திர ஜடேஜா 35 (29) ரன்கள் எடுத்தார். அவருடன் கடைசி வரை அவுட்டாகாமல் 3 பவுண்டரி 1 சிக்சருடன் அதிரடியாக 33* (17) ரன்கள் எடுத்த பாண்டியா பினிஷிங் கொடுத்தார். அதனால் 148/5 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் போராடி திரில் வெற்றி பெற்ற நடப்பு சாம்பியன் இந்தியா இந்த ஆசிய கோப்பையை வெற்றியுடன் துவங்கியுள்ளது.

- Advertisement -

டிகே – பண்ட்:
அதைவிட கடைசியாக கடந்த வருடம் இதே துபாயில் உலக கோப்பையில் முதல் முறையாக படுதோல்வியை பரிசளித்த பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது. முன்னதாக இந்த போட்டியில் விக்கெட் கீப்பராக செயல்படப் போவது யார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இதுவரை டி20 கிரிக்கெட்டில் நிறைய வாய்ப்புகள் கிடைத்தும் பெரிய அளவில் சாதிக்காத ரிஷப் பண்ட்க்கு பதிலாக ஒரு கட்டத்தில் கேரியர் முடிந்துவிட்டது என்று அனைவரும் நினைத்தாலும் தம்மால் இந்தியாவுக்கு டி20 உலகக் கோப்பையை வென்று கொடுக்க முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக அதிரடியாக செயல்பட்டு 3 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்த தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டார்.

சமீபத்திய தென்னாபிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடர்களில் கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக செயல்பட்டு 37 வயதுக்கு பின் 2 ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற இந்திய வீரர் என்ற சாதனை படைத்து தனது திறமையையும் தரத்தையும் நிரூபித்த அவரை நம்பி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் இந்த முக்கிய போட்டியில் வாய்ப்பளித்தனர். ஆனால் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா போன்றவர்களும் பினிஷிங் செய்வார்கள் என்பதால் அந்த வேலைக்காக மட்டும் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்யக்கூடாது என்று ஆசிய கோப்பைக்கான அணி தேர்வு செய்யப்பட்ட போதே நிறைய விமர்சனங்கள் எழுந்தன.

- Advertisement -

வருங்காலத்தை பாருங்க:
இந்நிலையில் தரமான இளம் வீரரான ரிஷப் பண்ட்க்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பளிக்கப்பட்டது தமக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளதாக தெரிவிக்கும் முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் வருங்காலத்தை கருத்தில் கொண்டு இந்த வாய்ப்பு நீண்ட நாட்கள் நீடிக்கக்கூடாது என்று நம்புவதாகவும் கூறியுள்ளார். இதுபற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

“நானாக இருந்தால் இப்போது இது போன்ற சோதனைகளை செய்ய மாட்டேன். ஏனெனில் ஆசிய கோப்பையில் விளையாடும் உங்களுக்கு அடுத்ததாக 5 – 6 போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளது. அதன்பின் உலக கோப்பை வந்துவிடும். எனவே இப்போதிலிருந்தே நீங்கள் இறுதிக்கட்ட 11 பேர் அணியை முடிவெடுக்க வேண்டும். அதற்காக நீங்கள் பேக்-அப் வீரர்களையும் வைத்துக்கொள்ளலாம். ஆனால் இந்த முடிவு எனக்கு ஆச்சரியமாக உள்ளது. ஏனெனில் ரிஷப் பண்ட் துருப்புச்சீட்டு வீரர். அத்துடன் தற்போதைய அணியில் நிறைய வலதுகை பேட்ஸ்மேன் இருப்பது எதிரணிக்கு சாதகமாக இருக்கும்”

“எனவே இடது கை பேட்ஸ்மேனான அவர் மிடில் ஆர்டரில் விளையாட வேண்டும். சமீப காலங்களில் அவர் ஓரளவு சிறப்பாகவும் செயல்பட்டுள்ளார். மேலும் அவர் தொடக்க வீரராகவும் மிடில் ஆர்டரிலும் விளையாடும் திறமையும் பெற்றுள்ளார். எனவே இந்த முடிவு எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாகும். மேலும் இந்த முடிவு நீண்ட காலம் நீடிக்காது என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.

அதேபோல் பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இது மிகப்பெரிய முடிவாகும். நவீன கிரிக்கெட்டில் பண்ட் மிகச்சிறந்த டாப் வீரர். பேட்டிங் செய்யும் விதத்தில் அவர்தான் இந்திய கிரிக்கெட்டின் வருங்காலம் ஆவார். விரைவில் உலகக் கோப்பையும் வரும் நிலையில் அணி நிர்வாகம் வித்தியாசமான திட்டத்தை தீட்டுகிறது” என்று கூறினார்.

- Advertisement -
Published by