மீண்டும் உங்களது பந்துவீச்சை காண ஆவலாக காத்திருக்கிறேன் – முன்னணி வீரருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ரெய்னா

Raina

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் ஸ்ரீசாந்த் 2007ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரிலும், 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் இடம் பிடித்திருந்தார். அதன் பின்னர் 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தார் ஸ்ரீசாந்த். அந்த நேரத்தில் மேட்ச் பிக்ஸிங் செய்ததாக கூறி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அவரை கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை செய்தது.

Sreesanth

அதனை தொடர்ந்து ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா என மூன்று வீரர்கள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் வாழ்நாள் தடை செய்யப்பட்டனர். இதனையடுத்து ஸ்ரீசாந்த் சட்டரீதியாக வழக்கு தொடுத்து கடந்த 8 வருடமாக வழக்காடு மன்றத்தில் போராடி வந்தார். அதனைத் தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஸ்ரீசாந்த் நிரபராதி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், கடந்த வருடம் மே மாதம் அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாடலாம் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து தொடர்ந்து தற்போது பயிற்சி செய்து வருகிறார் ஸ்ரீசாந்த். மேலும், இந்த வருடம் கேரளா அணி சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் விளையாடுகிறது. இதற்கான உத்தேச பட்டியலில் இவரது பெயரும் இடம் பெற்றிருக்கிறது. தொடர்ந்து பயிற்சி செய்து கொள்ள அவர் மீண்டும் தனது அணியுடன் இணைய ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார். இதனை வைத்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

வாழ்த்துக்கள் சகோதரா உங்களது மேஜிக் நிறைந்த பந்துவீச்சுகளை மீண்டும் பார்க்க ஆவலாக இருக்கிறேன் என்று பதிவு செய்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். ஏற்கனவே இந்திய அணியில் விளையாடியுள்ள ஸ்ரீசாந்த் தோனி மற்றும் ரெய்னாவுடன் நெருக்கமான நட்பில் இருந்ததால் தற்போது மீண்டும் கிரிக்கெட் விளையாட துவங்கியுள்ள அவருக்கு ரெய்னா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

twitter

சையத் முஷ்டாக் அலி தொடருக்காக தற்போது கேரளாவில் பயிற்சி செய்து வரும் ஸ்ரீசாந்த் இளம்வீரர்களை வலைப்பயிற்சியில் ஊக்குவிக்காமல் அவர்களை கடுமையாக திட்டி வருவதும், அவர்களுக்கு எதிராக தனது ஆக்ரோஷத்தை காட்டி வருவதையும் ரசிகர்கள் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.