- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அவர் வேணாம்ன்னு சொன்னாலும் இந்தியாவுக்காக விராட், ரோஹித் அதுல விளையாடனும்.. ரெய்னா கருத்து

இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக இலங்கையில் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடியது. அதைத் தொடர்ந்து தாயகம் திரும்பிய இந்திய அணியினர் அடுத்த மாதம் வங்கதேசத்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளனர். அதற்கு முன்பாக இந்திய வீரர்கள் ஒரு மாதத்திற்கு மேல் வேறு எந்த விதமான கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை.

அந்த சூழ்நிலையில் இந்தியாவில் 2024 துலீப் கோப்பை உள்ளூர் தொடர் வரும் செப்டம்பர் ஐந்தாம் தேதி துவங்குகிறது. அதில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் விளையாடுவார்கள் என்று ஆரம்பத்தில் செய்திகள் வெளியானது. ஆனால் துலீப் கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட 4 அணிகளில் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

- Advertisement -

இந்தியாவுக்காக தயாராக:

அது பற்றி கேட்டதற்கு சீனியர் வீரர்களை மரியாதையுடன் நடத்துவதற்காக அவர்களை தேர்ந்தெடுக்கவில்லை என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தார். அத்துடன் வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. எனவே அதற்கு முன்பாக விளையாடி காயத்தை சந்திக்கும் ரிஸ்க் எடுக்க விரும்பாததால் ரோஹித் மற்றும் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதாக ஜெய் ஷா தெளிவுபடுத்தினார்.

இருப்பினும் அதற்கு சஞ்சய் மஞ்ரேக்கர், சுனில் கவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இந்நிலையில் 2024 ஐபிஎல் தொடருக்குப்பின் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் எவ்விதமான டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். எனவே அடுத்து நடைபெறும் வங்கதேச தொடருக்காக அவர்கள் துலீப் கோப்பையில் விளையாட வேண்டும் என்றும் ரெய்னா கூறியுள்ளார்.

- Advertisement -

ரெய்னாவின் கருத்து:

இருப்பினும் அனுபவத்தைக் கொண்ட அவர்களால் நேரடியாகவும் களமிறங்கி அசத்த முடியும் என்று தெரிவிக்கும் ரெய்னா இது பற்றி பேசியது பின்புறமாறு. “அவர்கள் கண்டிப்பாக துலீப் கோப்பையில் விளையாட வேண்டும். நாம் ஐபிஎல் தொடருக்குப் பின் போதுமான அளவுக்கு சிவப்பு நிற பந்து கிரிக்கெட்டில் விளையாடவில்லை. எனவே பெரிய தொடருக்கு செல்வதற்கு முன் நீங்கள் சிவப்பு நிற கிரிக்கெட்டில் விளையாடுவது அவசியம்”

இதையும் படிங்க: அலைஸ்டர் குக்கின் சாதனையை சமன் செய்த் ஜோ ரூட்.. சச்சினையும் தாண்டி அசத்தப்போறது கன்பார்ம்

“அதே சமயம் இந்திய அணியுடன் சேர்ந்ததும் எவ்வாறு பயிற்சிகளை எடுக்க வேண்டும் என்ற முதிர்ச்சி அவர்களிடம் உள்ளது என்று நினைக்கிறேன். சில நேரங்களில் குடும்பத்துடன் நேரம் செலவிடுவதும் முக்கியம்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா விளையாடும் டெஸ்ட் தொடர் செப்டம்பர் 19ஆம் தேதி சென்னையில் துவங்குவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -