என்னுடைய எதிர்கால திட்டம் இதுதான். என்னுடைய 15 வருட அனுபவத்தை வீணடிக்க விரும்பவில்லை – ரெய்னா விருப்பம்

Raina

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆக பத்து வருடங்களுக்கு மேலாக விளையாடிவிட்டு தோனியுடன் சேர்ந்து கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ஓய்வினை அறிவித்தவர் சுரேஷ் ரெய்னா. இவர் 2005ஆம் ஆண்டிலிருந்து இந்திய அணிக்காக 18 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 768 ரன்களும், 226 ஒருநாள் போட்டிகளில் 5615 ரன்களும், 78 டி20 போட்டிகளில் ஆடி 1605 ரன்கள் குவித்திருக்கிறார்.

Raina

இவற்றில் மொத்தம் 7 சதங்களும் 48 அரை சதங்களும் அடங்கும். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ளூர் போட்டிகளில் இந்திய அணியில் இடம் பிடித்தவர் என்றாலும் இவர் உண்மையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த இவரது பூர்வீகம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருக்கிறது.

இந்நிலையில் தனது பூர்வீக நிலமான ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பின்தங்கிய நிலையில் உள்ள சிறுவர்களுக்கு பயிற்சி அளித்து கிரிகெட் திறமைகளை வெளிக்கொண்டு வர விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதற்காக அந்த மாநில போலீஸ் அதிகாரியிடம் அனுமதி கோரியுள்ளார். அதில்…

Raina-1

நான் கடந்த 15 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் அளவில் எனக்கென்று ஒரு அடையாளத்தை பதித்திருக்கிறேன். இதன் காரணமாக நான் பல ஆண்டுகளாக கற்றுக்கொண்ட கிரிக்கெட் அறிவு மற்றும் நுட்பங்களை பயன்படுத்தி அடுத்த தலைமுறையை ஊக்குவிக்க நினைக்கிறேன்.

- Advertisement -

Raina

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பின்தங்கிய நிலையில் இருக்கும் இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதுதான் என்னுடைய ஒரே நோக்கம். நான் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவன் தான். எனது அம்மா தர்மசாலாவை சேர்ந்தவர். எனது அப்பா காஷ்மீரை சேர்ந்தவர் என்று தெரிவித்திருக்கிறார் சுரேஷ் ரெய்னா.