இந்திய அணிக்காக இவர் இன்னும் 10-15 வருஷம் விளையாடனும். இதுவே என் ஆசை – சுரேஷ் ரெய்னா விருப்பம்

Raina

இந்திய அணிக்காக இளம் வீரர்கள் வரிசையாக களமிறங்கி கொண்டே வருகின்றனர். சுப்மன் கில், நவதீப் சைனி, முகமது சிராஜ், தாகூர், அக்ஷர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், ரிஷப் பண்ட் என அடுத்தடுத்து திறமையான இளம் வீரர்கள் இந்திய அணிக்காக களம் இறங்கி கொண்டே வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பேசியை இந்திய முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா இந்திய இளம் வீரர்கள் மத்தியில் தனக்குப் பிடித்த இரு வீரர்களாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரிஷப் பண்டை கூறியுள்ளார்.

மேலும் பேசிய சுரேஷ் ரெய்னா, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவர்கள் இருவரும் மிக சிறப்பான விதத்தில் விளையாடினர். வாஷிங்டன் சுந்தர் பவுலிங்கில் விக்கெட்டுகளை கைப்பற்ற வில்லை என்றாலும் பேட்டிங்கில் இரு அரை சதம் அடித்து தனது திறமையை நிரூபித்தார்.
அதேபோல மறுபக்கம் ரிஷப் பண்ட் தனது அதிரடியான பேட்டிங் திறமையால் இரண்டு அரை சதங்கள் மற்றும் ஒரு சதம் என அடித்து இங்கிலாந்து அணிக்கு தக்க நெருக்கடியை கொடுத்துக் கொண்டே வந்தார்.

அதேபோல ஒருநாள் தொடரிலும் தனக்கு கிடைத்த இரண்டு வாய்ப்புகளில் சரியாக பயன்படுத்தி அந்த இரண்டு போட்டிகளிலும் அரைசதம் அடித்து அசத்தினார். இளம் வீரர்களை பொறுத்தவரையில் இவர்கள் இருவரை தான் எனக்கு மிகமிக பிடித்துள்ளது என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். ரிஷப் பண்ட் ஆரம்ப காலகட்டத்தில் மோசமான உடற்தகுதி காரணமாக பேட்டிங்கில் சொதப்பி வந்தார்.

pant 1

அதன் பின்னர் தனது கடின உழைப்பால் மீண்டும் தக்க உடற்கட்டை கொண்டு வந்து, கடினமான பேட்டிங் பயிற்சியின் மூலம் தனது பேட்டிங் திறமையை என்று காட்டி வருகிறார். ஆஸ்திரேலிய தொடர் முதலிலிருந்தே மிக சிறப்பாக தொடர்ச்சியாக நல்ல வகையில் விளையாடி வருகிறார்.
இந்திய அணி அவருக்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் வாய்ப்புகளை வழங்கிக் கொண்டே வர வேண்டும்.

- Advertisement -

Pant-3

அதைத்தான் தற்போது இந்திய கேப்டன் விராட் கோலி வழங்கிக் கொண்டு வருகிறார். நிச்சயமாக ரிஷப் பண்ட் இன்னும் 10 முதல் 15 ஆண்டுகள் இந்திய அணிக்காக மிகச்சிறந்த வகையில் விளைவாக விளையாடுவார் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று இறுதியாக சுரேஷ் ரெய்னா கூறி முடித்தார்.